Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Friday 27 December 2019

Slow down of Indian economy

Look what I shared: 5 Signs That Prove The Economic Slowdown Is Real And Here To Stay | HuffPost India @MIUI| https://www.huffingtonpost.in/entry/economic-slowdown-indian-economy-onion-prices-nirmala-sitharaman-stagflation_in_5e048271e4b0843d360362dd?ncid=other_trending_qeesnbnu0l8&utm_campaign=trending

Wednesday 25 December 2019

முசுலீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் !

முசுலீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் !


 

NRC மற்றும் CAB ஆகியவை ஒரே மோசமான விதைகளின் இரட்டையர்கள்; ஆனால் அவை வேறுபட்டவை. CAB என்பது இந்திய அரசியலமைப்பு மீதான தெளிவான ஒரு கருத்தியல் யுத்தம் மற்றும் ஒரு பிரச்சார கருவி.
By    கலைமதி  
முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் ஒரு பகுதியாக நரேந்திர மோடி அரசாங்கம் நிறைவேற்றிய குடியுரிமை (திருத்த) மசோதா, இந்தியர்களில்  மிகவும் ஏமாற்றப்பட்டவர்கள் இந்துக்கள்  என்பது ஒரு முக்கியமான அனுமானமாக உள்ளது. ஏனென்றால் அடுத்ததாக வரும் தேசிய குடிமக்- களின் பதிவேட்டில் (என்.ஆர்.சி), நூற்றுக்கணக்கான மில்லி- யன் குடிமக்கள் விரைவில் தங்கள் தேசியத்தை நிரூபிக்க வரிசையில் நிற்பார்கள். அவர்களில் பெரும்பாலோர் இந்துக்களாக இருப்பார்கள்.
சமீபத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்த தொலைக்காட்சி விவாதத்தின் போது, பாஜக சார்பு பேச்சாளர் ஒருவர் இந்த அரசாங்கம் முஸ்லிம்களை வெறுக்கவில்லை என்று என்னிடம் உறுதியளித்தார்.  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதால் பாதுகாப்பு கோரும் முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு பாகுபாடும் உருவாகாது எனவும் அவர் தெரிவித்தார். இந்த வியக்கத்தக்க அறிவிப்புக்கான ஆதாரமாக, இந்தியா 2015-ல் அட்னான் சாமிக்கு குடியுரிமையை வழங்கியதை அவர் கூறினார்.  நான் அப்போது கிட்டத்தட்ட தொலைக்காட்சியில் சத்தமாக சிரித்தேன்.
லண்டனில் பிறந்த பணக்கார, புகழ்பெற்ற பாகிஸ்தான் குடிமக்களுக்கு அன்புக்காக எந்த அரசாங்கமும் இத்தகைய குடியுரிமையை வழங்கும். நான் எனது இந்தியாவிற்காகவும், என் சக இந்தியர்களுக்கும்முஸ்லீம் மற்றும் இந்து மற்றும் அனைவருக்குமாக அக்கறை செலுத்துகிறேன். குறிப்பாக ஏழ்மையான, காகிதமில்லாத, ஆவணமற்றவர்களுக்காக நான் கவலை கொள்கிறேன்.
NRC மற்றும் CAB ஆகியவை ஒரே மோசமான விதைகளின் இரட்டையர்கள்; ஆனால் அவை வேறுபட்டவை. CAB என்பது இந்திய அரசியலமைப்பு மீதான தெளிவான ஒரு கருத்தியல் யுத்தம் மற்றும் ஒரு பிரச்சார கருவி.
கருத்தியல்ஏனென்றால் அது குடியுரிமைக்கான ஒரு அடையாளமாக துன்புறுத்தப்பட்ட, இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களை மூன்று முசுலீம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து பாதுகாப்பதாகக் கூறிமதம்என்பதை சட்ட முன்மாதிரியாக நிறுவுகிறது. ஆனால், முசுலீம்களை அதிலிருந்து வெளியேற்றுகிறது. முசுலீம்களை வெல்வதற்கு, அவர்களுக்கு அரசியலமைப்பு தந்திருக்கிற உரிமைகளை  மறுப்பது, அச்சத்தை பரப்புவது, அவர்களுக்கு தூக்கமில்லாத இரவுகளை வழங்குவது உள்ளிட்டவற்றைச் செய்வது. இந்தியாவை அழித்து பிளவுபடுத்தி, காவி பார்வையுடன் முன்னேறுவது. இதுதான் அந்தக் கருத்தியல் யுத்தம்.
அடுத்தது பிரச்சாரம்ஏனெனில் மத்திய உள்துறை அமைச்சர் இந்துக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி.யால் பயப்பட ஒன்றுமில்லை என்று கூறிக்கொண்டே இருக்கிறார். உண்மை என்னவென்றால், என்.ஆர்.சி நம் அனைவரையும் அழித்துவிடும். இந்துக்களையும் கூட.
அரசாங்கத்தின் CAB – NRC திட்டம் அனைத்து இந்தியர்களின் பயம், கீழ்ப்படிதல் மற்றும் அடிமைப்படுத்துதலின் விவரிப்பையும் ஆட்சியையும் முன்வைக்கிறது. குடியுரிமை என்பது ஒரு தேசத்தைச் சேர்ந்த மிக அடிப்படையான மனித உரிமை, இந்த பரந்த கிரகத்தில் ஒரு சிறிய இடத்தை உங்கள் நாடு என்று கூறுவது, அதன் பாதுகாப்பிற்கு உரிமை பெறுவது.
இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்முறைப்படுத்துவதாக அரசாங்கம் அச்சுறுத்துகிறது. விலக்கி வைக்கப்பட்ட இந்துக்கள் குடியுரிமை சட்டத்தின் மூலம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் பிரச்சாரம் செய்கிறது. அமித் ஷாவே பிசைந்து உருவாக்கிய பிரசாத லட்டு எனவும் சொல்லப்படுகிறது. டிசம்பர் 9, 2019 அன்று மக்களவையில் மசோதாவை அறிமுகப்படுத்திய உள்துறை அமைச்சர் பேசியதைக் கேளுங்கள். அவர் தேர்ந்தெடுத்த சொற்களில் கவனம் செலுத்துங்கள்; அவரது உடல் மொழியைப் பாருங்கள். ஒரு இடைக்கால சர்வாதிகாரி ஒருவரை கற்பனை செய்யுங்கள். அவர் விரும்பும் போது குடியுரிமையை வழங்குவார் அல்லது குடியுரிமையை பறிப்பார். அவர் உங்களை மகிழ்ச்சி படுத்தும்போது, “நாங்கள் அவர்களுக்கு குடியுரிமையைக் கொடுப்போம்; அவர்களுக்கு நாங்கள் குடியுரிமையைக் கொடுப்போம்” . ‘நாம்’ -மதிப்பிற்குரியநாங்கள்.
இது ஒரு கருத்தியல் திட்டத்தின் குருட்டுத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அது தனது சொந்த உரிமை கோரல்களை, அதாவது இந்துக்களைக் கூட கவனிப்பதில்லை. CAB மற்றும் NRC இரண்டின் தெளிவான இலக்கு முசுலீம்கள். அது நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை. இந்த அரசாங்கம் இந்திய முசுலீம்களின் உரிமைகளைத் தகர்த்து, பறிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்துத்துவா திட்டத்திற்கு முசுலீம்களை விரட்டுவது முக்கியம். அதைப் பற்றி தொடர்ந்து பேசுவது கடினமானது. அதுதான் அவர்கள் யார் என்பதைக் காட்டுகிறது. இதுதான் அவர்களின் கீழ்த்தரமான அரசியல் வகைமை. அதிலிருந்து வேறுபட்டதை நாம் எதிர்பார்க்கக்கூடாது.
ஆனால் அசாமில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்,  இந்தத் திட்டத்துக்கு ஏற்கெனவே லட்சக்கணக்கான இந்தியர்கள் விலை கொடுத்துள்ளனர்; மேலும் பல மில்லியன் கணக்கானவர்கள் இதற்கான விலையைச் செலுத்துவார்கள். அசாமில் இருந்து வரும் இதயத்தை உடைக்கும் படங்களை நினைவு கூருங்கள். இவர்கள் அனைவரும் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள்; அவநம்பிக்கையான மக்கள். ஆம், லட்சக் கணக்கில் இந்துக்களும் உள்ளனர். அசாமில் உள்ள என்.ஆர்.சிக்கு ஒரு குறிப்பிட்ட உள்ளூர் வரலாறு மற்றும் பகுத்தறிவு இருந்தது. பாஜக அதை வகுப்புவாதமாக்க முயன்றது. அதன் இந்து-முஸ்லீம் கண்ணோட்டத்தை அசாமி-பெங்காலி என்ற பிழையான கோட்டின் மீது மிகைப்படுத்தியது; உச்சநீதிமன்றம் அதை மனிதாபிமானமற்ற முறையில் நடைமுறைப்படுத்தியது. மேலும், அங்குள்ள பரிதாபகரமான சோகமான குழப்பத்தைப் பாருங்கள். இந்தியாவின் பிற பகுதிகளில், என்.ஆர்.சி பெரிய அளவில் மிகப்பெரும் குழப்பத்தை உருவாக்கும்.
என்.ஆர்.சி செயல்படுத்த தொடங்கியவுடன், அமித் ஷாவும் அவரது அதிகாரிகளும் வேறுவிதமாக முடிவு செய்யும் வரை நாம் அனைவரும் குடிமக்கள் அல்லாதவர்களாக குறைக்கப்படுவோம். அந்தத் தருணத்தை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். அனைத்து (முஸ்லீம்) ‘கரையான்களையும்மற்றும்ஊடுருவல்காரர்களையும்ஒரு தேசிய என்.ஆர்.சி  மூலம் விரட்டுவோம் என உள்துறை அமைச்சர் பலமுறை மிரட்டியுள்ளார், ஆனால் CAB மூலம் இந்துக்களை காப்பாற்ற சத்தமாகவும் தெளிவாகவும் சபதம் செய்தார். இந்த கூற்று உண்மையில் எப்படி இருக்கும் என்பதை ஆராய்வோம்.
என்.ஆர்.சியின் அசாம் வார்ப்புருவைப் பொறுத்தவரை, நிரூபிக்கப்படும் வரை நாம் அனைவரும் குடிமக்கள் அல்லாதவர்களாக கருதப்படுவோம். இந்துக்களும் கூட.
3.3 கோடி அசாம் குடியிருப்பாளர்கள் அனைவரும் என்.ஆர்.சி.க்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது என்பதை நினைவில் கொள்க. இந்துக்களும் கூட.
நம் நாடு நம்முடையது என்பதை நிரூபிக்க நாம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கும். இந்துக்களுக்கும் கூட.
அஸ்ஸாமில் உள்ள என்.ஆர்.சி-யிலிருந்து வெளியேறிய எந்த இந்துவும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உள்துறை அமைச்சர் கூறுகிறார், ஏனெனில் குடியுரிமை திருத்த சட்டம் என்ற சர்க்கஸின் மாஸ்டரே அவர்தான்.
வாழ்த்துக்கள். ஏறக்குறைய நீங்கள் அங்குதான் இருக்கிறீர்கள். இப்போது என்ன?
அசாமில் உள்ள என்.ஆர்.சி-யிலிருந்து 19 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர், வட இந்தியாவைச் சேர்ந்த பெங்காலி அல்லாத இந்துக்கள் உட்பட 12 லட்சம் இந்துக்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் ஒவ்வொருவரும் இந்திய குடிமக்கள் என்று கூறிக்கொண்டனர். ஆனால் அவர்கள் பங்களாதேஷில் இருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட அகதிகள் என்று கூறுமாறு CAB கோருகிறது.
12 லட்சம் பேர் தங்கள் ஆவணங்கள் மோசடியானவை என்று சொல்ல வேண்டியிருக்கும், அவர்கள் பொய் சொன்னார்கள். அதனால்தான் CAB அவர்களுக்கு எந்தவொரு சட்ட நடவடிக்கையிலிருந்தும் விலக்கு அளிக்கிறது.
இந்த இந்துக்களும் 1971-க்கு முன்னர் அசாமுக்கு வந்ததாகக் கூறியவர்கள். என்.ஆர்.சிக்கான இறுதி கெடுவும் அதுவே.
ஆகவே, 1971 க்கு முந்தைய லட்சக்கணக்கான இந்த இந்துக்கள், பெங்காலி அல்லாதவர்கள் உட்பட, முதலில் தாங்கள் கிழக்கு பாகிஸ்தானியர்கள் என்று அறிவிக்க வேண்டும், பின்னர் 1) நான் இந்தியன் என்று பொய் சொன்னேன். 2) பங்களாதேஷால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறுபவர்கள், நான் பொய் சொன்னேன், ஏனென்றால் நான் உண்மையில் 1971 க்குப் பிறகு வந்தேன், பங்களாதேஷ் பிறந்ததும் 3) நான் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டேன் என சொல்ல வேண்டும்.
அதனுடைய நல்ல அதிர்ஷ்டத்துக்கு வாழ்த்துகள்.
மேலே உள்ள அனைத்தையும்  கவனித்துக்கொள்வதற்கு CAB ‘விதிகள்எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பது எனக்கு வியப்பளிக்கிறது.
இந்தியாவின் பிற பகுதிகளில் என்.ஆர்.சி செயல்படுத்தப்பட்டாலும், CAB வந்த பிறகும், எந்த வித்தியாசமும் இருக்காது. காகிதமில்லாத ஏழை தமிழ் இந்து என்.ஆர்.சிக்கு என்ன சொல்லப் போகிறார்? நான் உண்மையில் ஒரு ஆப்கானி. மோசமான விஷயம் என்னவென்றால், பங்களாவின் ஒரு வார்த்தையும் பேச முடியாது, ஆனால் நான் உண்மையில் வங்க தேசத்தைச் சேர்ந்தவன்.. அடிப்படையில், இந்தியாவில் ஒவ்வொரு காகிதமற்ற ஏழை இந்துவும் எப்படியாவது பாதுகாக்கப்படுவார் ஏனெனில் CAB இங்கே உள்ளது என்பது அபத்தமான பிரச்சாரம்.
ஒரு சர்வாதிகார அரசாங்கத்திற்காக குடியுரிமை பெறுவதற்- கான தணிக்கைக்கு நாம் அனைவரும் வரிசையில் நிற்க வேண்டும் என்பதே என்.ஆர்.சி திட்டம் ஆகும். முசுலிம்கள் மிகவும் பயப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் வகுப்பு- வாத என்.ஆர்.சி இயந்திரங்களால் குறிவைக்கப் பட்டிருக்- கிறார்கள்; குறிப்பாக பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில். ஆனால், அனைவரும் வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். யோசித்துப் பாருங்கள். இந்த நாட்டில் யாருக்குகுடியுரிமைஆவணங்கள் இல்லை? ஏழைகள், கிராமப்புறங்கள், நிலமற்ற- வர்கள், குடியேறியவர்கள், வீடற்றவர்கள், பெண்கள். இந்துக்களுக்கும் கூட. NRC-CAB திட்டம் ஒரு பிளவுபட்ட சித்தாந்தத்தின் சேவையில் மக்கள் விரோத அரசியல் கருவியாகும்.
அசாமில் மட்டும் என்.ஆர்.சி.க்கு ரூ. 1,220 கோடிக்கு மேல் செலவாகும் என்பதால், இந்தியா முழுவதிலும் இது ரூ. 50,000 அல்லது 60,000 கோடிக்கு மேல் செலவு பிடிக்கலாம். ஊர்ந்து செல்லும் பொருளாதாரம் மற்றும் வேலையின் - மையை பெரிதாகி வரும் சூழலில், இது பைத்தியக்காரத் தனமான ஆளுகை. இதன் நோக்கம் என்னவென்றால், பாஜக இந்து-முசுலீம் உறவை ஒரு வகையான கொதிப்பிலேயே வைத்திருக்க வேண்டும். எல்லோரும் என்றென்றும் ஒரு இந்து அல்லது ஒரு முசுலீம் என்பதை உறுதிசெய்து, வெங்காய விலையை மறக்கச் செய்து, 2024 தேர்தலில் பாஜக வெற்றிபெற உதவ வேண்டும். நாடு முழுவதும் பெரும் குழப்பம் இருக்கும். இதன் தாக்கத்தை முசுலீம்கள் தாங்குவர், ஆனால் இந்தியாவின் பரந்த இந்து மக்களும் இதன் இணை சேதத்தை சந்திப்பார்கள். குடிமக்களாகிய நம்முடைய எல்லா உரிமைகளும் என்றென்றும் அழிக்கப்படும்.
இந்தியர்களாகிய நாம் இதைப் பார்க்க முடியாவிட்டால், இப்போது CAB-NRC திட்டத்தை எதிர்க்காவிட்டால், நாம் அனைவரும் விரைவில் மும்மடங்கு ஆவணங்களை வைத்துக்கொண்டு வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். பணமதிப்பழிப்புக்குப் பின் நாம் எப்படி முட்டாள்களாக வரிசையில் நின்றோம் என்பதை நினைவில் கொள்க. எனது 12 வயது மகன் ஈதிற்காக தனக்கு கிடைத்த பழைய 500 ரூபாய் தாளைப் பற்றி இன்னமும் வருத்தப்படுகிறான். ஒரு மழை நாளில் அதை தனது உண்டியலில் மறைத்து வைத்தான். பணமதிப்பழிப்பு பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது, எனவே பயனற்ற அந்தத் தாள் அப்படியே தேங்கிவிட்டது.
இது இப்போது எனது மேசை டிராயரில் உள்ளது. நம் காலத்- தின் நினைவுச்சின்னம். நான் அவனுக்கு ஒரு புதிய ரூபாய் தாளை கொடுக்கவில்லை. பாசிசம் குறித்து அவன் அறிய- வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த CAB-NRC கனவைத் தடுக்க இந்துக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்த- வர்களும் சீக்கியர்களும் இன்று ஒன்றுபடாவிட்டால், அந்த நள்ளிரவு நேரத்தில் எங்கள் தாத்தா, பாட்டி மற்றும் பெரிய தாத்தா பாட்டி எங்களுக்காக ஒன்றாக வென்ற விலை- மதிப்பற்ற சுதந்திரத்தை காட்டி கொடுத்தவர்களாகிவிடு- வோம். நாம் பிளவுபட்ட தேசமாக இருப்போம். ஜின்னா அவரது கல்லறையிலிருந்து சிரிப்பார். எங்களுக்குத் தெரிந்த இந்தியா நம் காலத்தின் நினைவுச் சின்னமாக இருக்கும்.