Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Thursday, 22 March 2018

தேசியவாதங்களின்நாசகாரப் பரிமாணங்கள்


இத்தாலிஜெர்மானியத்
தேசியவாதங்களின்நாசகாரப் பரிமாணங்கள்
          



மொழிபெயர்ப்பும் தொகுப்பும்
                              .கௌரிகாந்தன்

சமர்ப்பணம்
இந்தியவகைப் பாசிசவியலின், முன்னோடிகளுக்கும்/மூலக்  கருத்தியலுக்கும் (சனாதன தர்மம்) எதிராகப் போராடிய இந்தியவகை மக்கள் ஜனநாயகத்தின் மூலவர்களில் ஒருவரான ஜோதிராவ் பூலே Jyotirao Phuleஅவர்களுக்கு.
                             
        எம்மைத் தம் குத்தகை அடிமைகளாய் அறிவிக்கும் பார்ப்பன மத நூல்கள் அனைத்தையும், அதேகருத்தில் அவர்கள் எழுதிய பிற நூல்களில் காணப்படும் கட்டுரைகளையும் இதன்மூலம் கடுமையாகக் கண்டனம் செய்கிறேன். இதேவிதமான அருவருப்பான கொள்கையை விரித்துரைக்கும் வேறெந்த மத நூல்களையும் கண்டிக்கிறேன். மனிதர்கள் எல்லாரும் மனித உரிமைகளைச் சமமாக அனுபவிக்கத் தகுதியானவர்களென விரித்துரைக்கும் நூல்களை நான் வழிபடுகிறேன். இந்த நூல்களை (உலகின்) எந்த நாட்டின், எந்த மதத்தின் சிந்தனையாளர்கள் எழுதி இருந்தாலும், அத்தகைய மதிப்புக்குரிய நூல்களை எழுதியோரின் தம்பியாக, என்னை நான் கருதுவேன் (நாமெல்லாருமே ஒரே படைப்பாளியின் குழந்தைகள் தானே) அதிலிருந்து அதற்கேற்ப நடப்பேன்”.
              
        இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான், பங்காள்தேஷ், ஆப்கானிஸ்தான், மியாமர் ஆகியநாடுகளின் மத்தியில் ஆட்சிபுரியும் பாசிசப் பேரகங்காரத்திற்கு எதிரான பலம்மிக்க இயக்கங்கள் இருக்கவே செய்கின்றன; அவை வளர்ந்தும் வருகின்றன. ஆனால், இவ்வித   எதிர்ப்பாளர்களில்  அநேகர் மாநிலளவில் அல்லது பிரதேசஅளவில் எதோஒருவகைப் பாசிசவியல்க் குணாம்சம் கொண்டவர்களாகவே உள்ளனர். பாசிஸவியலைக் குறுக்குவழியாகப் பயன்படுத்துவதில் நாட்டமுள்ளவர்களாகவே காணப்படுகின்றனர். பாசிஸவியலானது மனிதகுலத்திற்கே எதிரானது என்பதைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஜோதிலால் பூலே அவர்களிடம் அவ்விதப் புரிதலைக் காணக்கூடியதாய் இருப்பதால், இந்நூல் அவருக்குச் சமர்பிக்கப்படுகிறது.

Jyotirao Phuleஜோதிராவ் பூலே- பிற்சேர்க்கையைப் பார்க்கவும்.

பொருளடக்கம்
நுழைவாயல்                                                                             05
முன்னுரை                                                                               09
அத்தியாயம்  I. பாசிசவியல் ஒரு கதம்பம், ஆனாலும் ஓர் தேசிய முழுமை         15
                       1. பாசிசவியல் - முன்பின் முரண்களின் அபூர்வ கலவை              
                       2. இக்கலவை அறிஞர்களின் கண்டுபடிப்பல்ல   :              
அத்தியாயம்  II. குருதியின உயர்வு தாழ்வு-பாசிசக் கற்பிதங்கள்       :                       17
                       1. இரட்சிக்கப்பட்ட வெள்ளையரினம்              :              
                       2. இன மேன்மை ஐரோப்பியரின் பொதுத்தன்மை :              
                       3. குருதியினவாதம் ஏகாதிபத்திய சேவகனாகிறது:             
                       4. யூதஎதிர்ப்புவாதம்                               :              
அத்தியாயம் III. தலைவன் - ஒரு அதிமானுடன், நிகழ்கால அவதாரம் :                       23
                       1. காரணகாரியக் கோட்பாட்டின் நிராகரணம்     :              
                       2. தனிமனிதத் தலைமை வழிபாடு                :              
                       3. மேட்டுக்குடியினம்                               :              
                       4. முதலாவது பாசிச வீரபுருஷர்கள்               :                      
அத்தியாயம் IV. முற்றுமுழு - அதிகாரத்துவ அரசு               :                       27
                       1. மூடிமறைக்கப்பட்ட தனிநபர் அதிகார வெறி   :              
                       2. கிரேக்க அடிமை எஜமானர்களின் அடித்தளத்தில்:            
                       3. ஐரோப்பாவின் சாணக்கியன்-மைக்கியவல்லி  :              
                       4. “தேசிய அரசுஆண்டைகளின் தாதா           :              
அத்தியாயம் V. தேசியவாதத்தின் நாசகாரப் பரிணாமம்                 :               33
                       1. பாசிச தேசியவாதம் யுத்தவெறியின் கர்பப்பை :              
                        2. தேசியவாதம்- பாசிசவியல் எதிர் மார்க்சியவியல்:             
                       3. ஏதேச்சதிகார இராணுவம் தேசியவாதத்தின் முதுகெலும்பு
அத்தியாயம் VI. பாசிசக் கதம்பத்தில் காணப்படும் சமவுடைமை மலர்கள் :            37
                        1. பாசிசத் தலைவர்கள்-  
                       2. அனைவருக்குமான சமஉடமை                 :              
                       3. ஹிட்லரின் சமஉடமை                          :              
                       4. முசோலினியின் சமஉடமை                    :              



அத்தியாயம் VII. இராணுவவாதம் - பாசிசத்தின் கைபிரம்பாக           :               42
                       1. யுத்தமோகம்                              :                      
                       2. சமாதான விரும்பிகள்-அறிவிலிகள்     :                      
                       3. யுத்தம், ஆன்மீக வலுவை வெளிக்கொணர்கிறது:            
                       4. படைமுறைப்படுத்தல்                           :              
அத்தியாயம் VIII. தாக்குதல் நிலைத் தன்னிறைவுக் கோட்பாடு                         47
                       1. தன்னிறைவுக் கோட்பாட்டின் தொன்மை       :              
                       2. சுதந்திர வர்த்தகத்திற்கு எதிரானவர்கள்        :                                      3. கூட்டமைவுவாதம்                              :              
அத்தியாயம் IX. அனைத்துலக நிலைப்பாடு-“அனைத்தும் நமதே”       :               51
                       1. கொள்கையும் சதித்தனமும் ஒன்றேதான்       :              
                       2. ஆற்றல் அற்றவன் ஆளப்படுவான்              :              
                       3. உரிமை என்பது பிறர்மீதான அதிகாரம்         :              
                       4. அனைத்துலகச் சட்டங்கள் அவைக்குதவாதன :              
                       5. மனித உரிமைமீறல்கள் ஒரு அத்தியாவசியத் தேவை       
பிற்சேர்க்கை -      ஜோதிராவ் பூலே                                      :                57
அத்தியாயம் X.      இயல் அகராதி                                             :               60
அடிக்குறிப்புகள்                                                           :                        81
பெயர்க் குறிப்பு                                                          :                 84
                      


நுழைவாயல்
வாய்பாடாக்கவேண்டாம்
         நூலும், முன்னுரையும் 1988 இல் தொகுக்கப்பட்டு, 2003இல் அச்சுக்குத் தயார்நிலையை அடைந்தது. ஆனால் நூல் வெளிவரவில்லை. தற்போதுதான் அந்நிலை ஏற்பட்டுள்ளது. நூலின் நுளைவாயல் இயலகராதி, பெயரகராதி, அடிக்குறிப்பு ஆகியவை 2017 இல் எழுதப்பட்டவையாகும்.
         ஐரோப்பிய அனுபவத்தில் பாசிசம்மட்டுமே தேசியவாதத்தின் நாசகாரப் பரிமாணமாகக் கருதப்படுகிறது. ஆனால், தெற்காசியாவில் மிதவாதம், பாசிசம் ஆகிய இரண்டுமே தேசியவாதத் தின் நாசகாரப் பரிமாணங்களாக காணப்படுகின்றன. நூல் மிதவாதம் பற்றி ஆராயவில்லை.
         போராடும் தேசியஇனங்கள் பாசிசவியலின் செல்வாக்கிற்கு உட்படுவது இயல்பானது. அதற்கான அகபுற வாய்ப்புகள் நிறையவேஉண்டு. புறவாய்ப்பு அமைப்புரீதியாகச் செயற்பட்டு வருகின்றது. தேசியஇனங்களின் போராட்டங்கள் சமதர்மத்திற்கான போராட்டத்தின் துணைப் படைகளாக ஆகுவதை தடுப்பதற்காக, அவற்றை பாசிசத்தன்மை மிக்கதாக மாற்றுவதற்கான முயற்சிகளில் வல்லரசுகள் ஈடுபட்டுவருகின்றன. இச்செயற்பாடு அமைப்புரீதியான அணிதிரட் டலாகவும் நடைபெற்றுவருகிறது. இதனால் ஒடுக்கப்படும் தேசியஇனங்களிடையே காணப்படும் பாசிசப்போக்குள்ள இயக்கங்க ளையிட்டு ஒரு பகமைபோக்கை வளர்த்துக் கொள்ளக்கூடாது. தேசிய ஒடுக்குமுறைகளுக்கெதிரான முன்னணிப்போராளிகள் அனைவரும் இணையக்கூடிய சூளல் ஏற்படுத்தப்படவேண்டும். ஆகவே, பாசிசப் போக்குகளுடனான கருத்துப்போராட்டம் ஓர் உள்இயக்கப் போராட்ட மாகவே அமையவேண்டும் என்பதுவே தொகுப்பாசிரியரின் 1990களிலான கருத்தாக இருந்தது. இதனால்தான் நூலில், தமிழீழவரி டையே காணப்பட்ட பாசிசப்போக்குகளை நேரடியாகச் சுட்டிக்காட்டுவது தவிர்க்கப்பட்டது. ஆனால், வெளிப்படையான கருத்துப் போராட்ட மின்மை வல்லரசுகளுக்கே சாதகமாக அமைகிறதெனக் கருதுவதால், 2017இல் எழுதப்பட்ட பகுதிகளில் பாசிஸப்போக்குகள் வெளிப்படை யாகவும் நேரடியாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ள       
          
      பாசிசவியல்பற்றிய ஐரோப்பியஅனுபவங்களை, தெற்காசியவிற்குப் பிரயோகிக்கமுடியாது. பிரயோசிக்க முயல வும்கூடாது. ஆனால் பாசிசவியல் என்பதென்ன? அதன் இயங்கு விதிகளெவை என்பனபற்றிக் கற்றுக்கொள்ளலாம். ஒப்பீட்டாய்வு தெற்காசிய பாசிசத்தைப் பற்றியபுரிதலை வளர்த்துக்கொள்ளத் துணைபுரியும். இருயுத்தங்களுக்கும் இடைப்பட்டகால பாசிஸவியலும் தெற்காசிய பாசிஸவியலும் வேறுபடுவதைச் சுட்டிக்காட்டுவதே இப்பகுதியின் நோக்கமாகும்.
            இந்நூலில் பாசிசவியல்பற்றிய திறனாய்வு மூன்று வெவ்வேறுபட்ட கோணங்களில்இருந்து வைக்கப்பட்டுள்ளதென்பதை முதலில் அவதானிப்போம்.
            1. முதலாளிய ஜனநாயக (மிதவாத16) நோக்குநிலை
         2. சமஉடமைவாத ஜனநாயக52 நோக்குநிலை
         3. அராஜகவாத1 நோக்குநிலை
       இம்மூன்றும். அப்போதும்-இப்போதும், அங்கும்-இங்கும் பாசிசவியலுக்கு எதிரானவைகளே.
 அராஜகவாத நோக்குநிலை:
               அதிகாரஅமைப்புகளேயில்லாதமுழுமையானஜனநாயகத்தைக் கோருபவர்கள்.
              இது சாத்தியமே. ஆனால் எப்போது? வர்க்கங்களற்றசமூகம் தோற்றும்போது. அப்போது, அடக்குமுறைகள், மேலாதிக்கங்கள், சுரண்டல்கள், சமூகஅகங்காரங்கள்6, சமூக ஏற்றத்தாழ்வுகள் விசேடசலுகைகளை அனுபவிக்கும் உரிமைகள் ஆகியஅனைத்தும் இல்லாமல்போகும். இதனால், அரசு வாடிஉதிர்ந்து வீழ்ந்துவிடும். கூடவேஜனநாயகமும்48 ஒரு அரசியல் கட்டுமானமென்ற நிலையிலிருந்து வீழ, ஜனநாயகம்48 ஒரு வாழ்முறையாக மாறும்.  இதுதான் மனிதஇனத்தின் உன்னதஇலட்சியமாகும். இது எப்போது நிறைவேறும்? இப்போதுயாராலும் எதுவும்கூறமுடியாது. சமஉடமைத்துவ52 ஜனநாயகத்தை பாதுகாப்பது எவ்விதமென்பது இன்னமும் வெற்றிகரமாக பரிட்சித்துப் பார்க்கப்படாத நிலையே நிலவுகிறது. ருஷ்யாவில்தோல்வி. சீனாவில்? விவாதங்கள் நடைபெறுகின்றன. இவை அவசியமானதே. ஆனால், தெற்காசிய உடனடிக் குறிக்கோள் பாசிஸமற்ற அரசேயாகும்..

முதலாளித்துவ ஜனநாயக கண்ணோட்டம்(மிதவாத)

         குறைந்தளவிலானதாக இருந்தாலும் மிதவாதத் திறனாய்வையும் இந்நூல் உள்ளடக் கியுள்ளது. இது பாசிசவியல் கண்ணொட்டத்துடன் பல்வேறுஅம்சங்களில் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வதாகவே இருந்துவருகின்றது. சமதர்ம52எதிர்ப்பு, சமூகப்புரட்சி எதிர்ப்பு ஆகிய பாசிசவியற்மூலக்கூறுகள் காணப்படுவதே இதற்கானகாரணமாகும். இவர்களின் ஒருசாரர் காலத்துக்குகாலம் பாசிசவாதிகளாவது அன்றைய ஐரோப்பாவில் மட்டுமல்ல இன்றைய ஐரோப்பாவிலும், இன்றைய  தெற்காசியாவிலும் காணப்படுகின்றது. எவ்விதமும், இவர்களின் திறனாய்வு பாசிசவியலுடன் சிலசமரசங்களைக் கொண்டதாகஇருந்தாலும் பாசிசமல்லாத தேசஅரசுக்கான21 தேவைகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது. ஏனெனில் இவர்கள் தேசஅரசுகளின் அவசியத்தைப் புரிந்துகொண்டவர்கள்.

சமஉடமைவாதக் கண்ணோட்டம்

இந்நூலில் காணப்படும், டொக்கிலியாட்டிT1, M.N.றாய்R2. றோசா லக்ஸம்பேற்க்L1 ஆகியோரின் பகுதிகள் இவ்வித திறனாய்வுகளேயாகும். ஹெஹல்H1, டூரிங்D2 ஆகியோர் பற்றிய விமர்சனமும் மார்க்ஸியத்தைப்44 புரிந்துகொள்ள உதவுகிறது.
         பாசிசத்தேசியம் தோன்றியநாளில் இருந்து, சர்வதேசஅரங்கில் உலகாதிக்கசக்தியாக முதிர்ச்சிபெற்றகாலம்வரை பாசிசத்திற்கெதிரான முன்னணிப்படையணியாக சமஉடமை32 அணியினரேயாகும். பாசிசவியலின் அடிப்படைச்சித்தாந்தகளில் ஒன்றான குருதியினத்24 தேசிய வாதத்திற்கு21 இவர்கள் நேர்எதிரானவர்களாக இருப்பதே இதற்கான காரணமாகும். இதனால் பாசிசவியலுடனான இடைத்தொ டர்பில் எவ்விதசமரசமும் செய்துகொள்ளாதவர்கள் என்பதையும் இனியும் செய்துகொள்ள மாட்டாதவர்களென்பதையும்  யாரும்மறுக்க முடியாது. அதேவேளை நடைமுறை அவசியங்கள் ஏற்படும்போது பாசிஸவாதிகளுடன் ஒரு உடன்பாட்டிற்க்குச்செல்லவும் தயாராய்உள்ள வர்கள். தோழர் ஸ்ராலின் இதை நடைமுறைப்படுத்திக் காட்டியுமுள்ளார். அன்றைய ஐரோப்பியசூளலில் சமஉடமை52ஜன நாயகவாதிகளென அழைக்கப்பட்டோர், இன்றைய தெற்காசிய சூளலில் புதிய ஜனநாயக அணியினரென அழைக்கப்படுகிறார்கள்.
         அதேவேளை பாசிசவாதிகளையும், சமஉடமை52 ஜனநாயகவாதிகளையும் ஒரேநிலையில் வைத்துப் பாரப்பவர்களும் உண்டு, இவர்கல் ஹிட்லரும்A1, ஸ்ராலினும்D1 ஒரேவிதமானவர்களே என்று கூறுகிறார்கள். அரஜாகவாதிகளும்1, சமூகப்புரட்சியைக்கண்டு அஞ்சும் மிதவாதிகளும்16 இவ்வித திறனாய்வை முன்வைக்கத் தயங்குவதில்லை.
         மு.மு.அதிகாரத்துவம்,37 இராணுவவாதம்17, எதோச்சாதிகாரவாதம்4 ஆகியவைதான் இவ்விருவருக்கும் பொதுவானதாகக் கூறப்படுகிறது. சமஉடமை52ஜனநாயகவாதிகள் தேசஅரசு பற்றிய தமதுகொள்கைகளை மூடிமறைப்பதில்லை; பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை வெட்டவெளியாகவே ஒத்துக்கொள்கி றார்கள். அரசில் தொழிலாளிவர்க்க மேலாதிக்கம் தமது கட்சியினூடாக செலுத்தப்படும் என்பதையும், தமது தேசிய இராணுவம் கட்சியின் நேரடித் தலைமைக்கு உட்பட்டதே என்பதையும் மறைப்பதில்லை. அதற்கொப்பவே கட்சி-அரசாங்கம்-அரசு-இராணுவம் ஆகிய அமைப்புகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இது ஒன்றும் இரகசியமானதல்ல, சதியுமல்ல.
         இருந்தும் இவ்வரசுகள் பாசிசஅரசுகளைப்போல் மு-முஅதிகாரத்தவ37, இராணுவ வாத17,எதேச்சாதிகார4 அரசுக்களல்ல. ஏனெனில், பாசிசஅரசுகளின் உள்நாட்டுக்குணாம்சம் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளைக்கூட படிப்படியாக அழித்தொழிப்பதேயாகும். மக்களைத் தேசஅரசின் எடுபிடிகளாக தேசியவாத வேலைத்திட்ட ங்களின் பகடைக்காய்களாக மாற்றுவதேயாகும். ஆனால் சமஉடமைஅரசுகளின்தன்மை அதுவல்ல, முதலாளித்துவ ஜனநாயகத் தையும்விட உயர்வானஉரிமைகளை சமூகத்திற்கு வழங்குவதாகும். அதற்குகந்த முறையில் சமூகத்தின்பொருளாதார, அரசியல், பண்பாட்டு கட்டுமானங்களை மாற்றியமைப்பதாகும்.
         ஆனால், மாற்றியமைப்பை ஏற்படுத்துவதில் தவறுகள்ஏற்படஇடமுண்டு. மக்களின் முன்முயற்சி சிதையுமளவிற்கு மத்தியத்துவம் பிரயோகிக்கப்படவும்கூடும். இதுதான் தோழர் ஸ்ராலினின் பிற்காலத்தவறாகக் கருதப்படுகிறது. இத்தவறு அவர்காலத்திலேயே திருத்திக் கொள்ளப்படாததால் அவரது மறைவைத்தொடர்ந்துவந்த உடனடிக்காலத்தில் சமஉடமை அரசு வீழ்த்தப்பட்டு, அதிகாரத்துவ-அரசமுதலாளித்துவஅரசு உருவானது. சோவியத் குடியரசில் எதிர்ப்புரட்சி வெற்றிபெற்றது. இவ்வரசு, மா-ருஷ்யத்தேசியவாத அரசாகஇருந்தாலும் அது பாசிச அரசல்ல. இன்நிலமை தொடருமென எதிர்பார்க்க முடியாது. ஆனால்பாசிஸக் குணாம்சங்களில் ஒன்றான சமூகப்பேரகங்காரவாத6 அரசாக மாறியது.
         19ஆம் நூற்றாண்டின் ஐரோப்பியத்தேசங்களில் சிலவே குருதியினத்தேசிய24 அரசுகளாகமாறின. அனைத்துத் தேசியங்களும் நாசகாரத் தேசியவாதமாகப் பரிணமிக்க வில்லை. ஆகவேசகல தேசியவாதங்களும்21 பாசிசமாக மாறியேதீருமென்றும், அனைத்துவகைத் தேசியவாதங்களும்21 என்றென்றும் வெறுக்கப்பட வேண்டும் என்றும் அர்த்தப்படாது. இன்றைய தெற்காசியாவில் இருவகைத் தேசியவாதங்களைக் காண்கிறோம்.
         முதலாவதுவகைத் தேசியவாதம்21: முழுநாடுதழுவியது. பாரதீயத்தேசியமம், ஸ்ரீலங்காத் தேசியம், சிந்துத்தேசியம், மியாமரியதேசியம் ஆகியவையாகும். இவை பாசிசவடிவம் பெற்றுவிட்ட தேசியங்களாகும்21. இவை, முறையே இந்திய, இலங்கை, பாக்கிஸ்தானிய,  மலேசியத் தேசியஇனங்களை தமதுசொந்த மண்ணில் புதைத்துவிட்ட பாசிஸப் பேரகங்கார வாதங்களாகும்6.
         இரண்டாவதுவகைத் தேசியவாதம்: முன் கூறியநாடுகளில், காணப்படும் ஒடுக்கப்பட்ட தேசியஇனங்களின் தேசியவாதமாகும். இவை தத்தமது சொந்தநாட்டின் நிலப் பிரபுத்துவத்துடனான முரண்பாட்டின் எதிர்வினைக்களல்ல, மாறாக அன்று ஏகாதிபத்தியத்தினதும் (காலனி), இன்று குருதியினத்தேசிய வாதத்தினதும்24 (மறுகாலனி/புதியகாலனி)  ஆக்கிரமப்பின் எதிர்வினை களேயாகும். ஆகவே இந்நாடுகளில் தோன்றியுள்ள, தோன்று ந்தறுவாயிலுள்ள, தேசியங்கள் பாசிசத் தேசியமாகவோ, புதிய ஜனநாயகத்தேசியமாகவோ, முதலாளித்துவ ஜனநாயகத் தேசிய மாகவோ இருக்கலாம் அல்லது மாறலாம். இவைபற்றியஆய்வுகள் இங்குள்ள ஸ்தூலநிலையை வைத்துக்கொண்டு செய்யப்பட வேண்டியவைகளாகும்.
         தனிப்பெரும் தலைவர்கள் :இங்கும் மூன்று கண்ணோட்டங்களும் செயல்படுகின்றன.
         அராஜகவாதக்1 கண்ணோட்டம்: தலைவர்களையே முற்றாகநிராகரிக்கின்றது. ஆனால், அதிகாரமிக்க தலைவர்களை நிராகரிக்காத முதலாளித்துவஜனநாயகமும், சமஉடமைவாத ஜனநாயகமும்52 தலைவர்களை தனிமனிதஅதிகாரமையமாக நோக்கவில்லை. அவ்விதத் தலைவர்களை கட்சிகுக் கட்டுப்பட்ட வர்களாகவே நோக்குகின்றன. கட்சித்தலைமை கூட்டுத்தலைமை யாகவே கட்டமைக்கப்படுகின்றது. இவ்வளர்ச்சி படிப்படியானதாகவே அமைகின்றன. தனி மனிதர்களின் கூட்டுத்தலைவர் கட்சியின் தலைவராக வளர்ச்சிபெறுகிறார். மூன்றாவது கட்டத்தில் தனிமனிதரைவிட கட்சியின் தலைமை அங்கமே பிரதானமாகின்றது.
         ஆகவே தெற்காசிய தனிமனிதவழிபாடுகள் அனைத்தும் பாசிசத்தன்மை பெற்றவையென எடுத்தஎடுப்பில் முடிவுக்கு வந்துவிடமுடியாது. அவை எத்திசைநோக்கிப் பயணிக்கின்றன என்பது அவதானிக்கப்படவேண்டும். கட்சியையும், கட்சித் தலைமையையும் உருவாக்கும் திசைநோக்கியா அல்லது எதிர்த்திசையிலா என்பது பார்க்கப்படவேண்டும். முடிவெடுப்பதற்கு இதுவரையான நடைமுறை கள் போதுமா? மேலும் காலம்தேவைப்படுகிறதா என்பதுவும் ஆராயப் படவேண்டும்.
         அதேபோல் சமூகத்தின் ஜனநாயகஉணர்வு வளர்ச்சியின் தாக்கத்தினால் விழிப்படைந்த தனிநபர்எதேச்சாதிகாரம் தன்னை வெளிப்படுத்தாமல்கட்சி’, ‘இயக்கம்என்ற போர்வையில் செயற் படவும்கூடும் என்பதுவும் புரியப்படவேண்டும்.   தனிமனித தலைமை வழிபாடு34 பாசிசக் குணாம்சங்களில் ஒன்றென்பது உண்மை தான். ஆனால் தனிமனிதத்துதிபாடல் குணாம்சம் பாசிசவிய லுக்கு மட்டும் உரித்தானதல்ல. குடும்பஆதிக்கத்தில் இருந்துவிடுபடாத, மிதவாதத்16  தலைவர்களிடையேயும்கூட காணப்படுகிறது. புராண-இதிகாச தெற்காசியா, அவதாரநம்பிக்கை கொண்டதனால். இங்கு அரசியலுக்கப்பாலும் தனிமனிதத் துதிபாடல் விரிந்துள்ளதையும் கவனிக்கவேண்டும்.
         முடிவாக, ஐரோப்பியப் பாசிசம்பற்றியபுரிதலை வாய்ப்பாடாக்காமல், அவ் அனுபவ ஒளியில், நாம்எம்மைப் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில், அன்றையபாசிஸம், தேசியஇனங் களின் ஏகாதிபத்திய வழர்ச்சியை ஊக்குவிப்பதையும், தத்தமது நாடு களின் கம்யூனிஸஇயக்கத்தின் வழர்ச்சியைத் தடுப்பதை யும் நோக்கமாகக்கொண்டது. தெற்காசியாவின் இன்றைய முதல்வகைப் பாசிஸம், அன்றைய ஐரோப்பியப் பாசிஸத்துடன் ஒத்தியல்புகள் கொண்டுள்ளது உண்மையே. ஆனால், ஒடுக்கப்படும் தேசிய இனப்பாசிசம். ஐரோப்பியப்பாசிசத்திலிருந்து முற்றிலும் வேறுபட் டதாகும். முதல்வகைப்பாசிவதிகள் தத்துவார்த்தரீதியிலும், நடைமுறை யிலும் மக்களின் பொதுஎதிரிகள். ஆனால், இரண்டாவது வகைப்பா  சிசவாதிகள் கருத்தியலில் சமரசத்துக் கிடமில்லா எதிரிகள், ஆனால் நடைமுறையில் பேரகங்காரவாதத்திற்6கெதிரான போர்க்கள நண்பர்கள்.
         அராஜகவாதம்1, மிதவாதம்,16 சமதர்மஜனநாயகம்52,  ஆகிய மூன்றுஇயலகளும் ஒன்றுக் கொன்று நேரெதிரான இயல்களாகும். ஆனாலும், நாடு, நாட்டுப்பற்று ஆகிய அரங்குகளில் இம் மூன்று இயலர்களும் தமக்குள் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் மூவருக்கும் உண்டு. செயற்படவும் வேண்டும். தத்துவத் தூய்மைக் கோட்பாட்டைப் பின்பற்றி மக்கள் போராட்டங்களில் இருந்து தனிமைப்பட்டுவிடக்கூடாது. ஐரோப்பிய மார்க்ஸியர்கள்44 இத்தவறைச் செய்யவில்லை. பாசிஸவாதிகளுடனும் போராட்டத்தில் இணந்தார்கள், இதற்காக பாசிசவாதிகளால் கொல்லவும்பட்டார்கள். ஆனால் இறுதியில் பாசிஸவாதிகளை வென்று உலக வரலாறு படைத்தார்கள்.
         ஐரோப்பியநாடுகளில் தேசங்கள் இருந்தன. ஆனால், தெற்காசியாவில் தேசம், தேசஅரசு என்றெதுவுமில்லை. இருப்பதெல்லாம் தேசியஇனங்களின் சிறைக்கூடங்கள்தான். தேசம், தேசஅரசு என்பவை இன்னமும் இலட்சியக்கனவுகளாகவே உள்ளன. சிறைக்கூடங்களுக்கு உரிமையாளர் களான பேரகங்காரவாத6 ஒடுக்குமுறையாளர்கள், தம்மால் நிர்வகிக்கப்படும் சிறைக்கூடத்தை தேசமாகமாற்றக் கனவுகாண்கிறார்கள். இதுநடக்காதகனவு. மற்றோர்பக்கத்தில் ஒடுக்கப்பட்ட தேசியஇனங்கள் தம்மைத்தேசங்க ளாக்கிக்கொள்ளக் கனவுகாண்கிறார்கள். இவர்களின் கனவுகள் நிச்சயம்பலிக்கும். ஆனால், நிகழ்கால இருப்பு தேசஙகளல்ல, நாடுகளே. இந் நாடுகளில் எதுவும் இன்னமும் சுதந்திரமானவையல்ல. ஆகவே நாட்டிற்கென்று சில அரசியல், பொருளாதாரத் தேவைகள் உண்டு. மேற்கூறிய மூன்றுஇயலர்களும் இத்தேவைக்காக ஒன்றுபட வேண்டும்.  நாட்டுப்பற்றும் தேசப்பற்றும் ஒன்றோடொன்று முரண்படாத முறையில் பயணிக்க வேண்டும்.