Wednesday, 17 May 2017
தாய்
மொழி-தேசிய மொழி-சந்தைக்கான மொழி பரஸ்பர உறவுகள்
உலகளாவிய
முறையில் ஒருங்கமைக்கப்பட்டுவரும் இந்தியச்
சந்தையில் மொழிக்கு இருக்கும் தகமையும், “சுதந்திரமும்” வேறு, தேசியப் பண்பாட்டை உருவாக்கு வதிலும்,
தேசத்தின் செயல்பாட்டை உறுதிப்படுத்து வதிலும் மொழிக்கு இருக்கும் தகமையும், “சுதந்திரமும்”
வேறு.
இந்தியச்
சந்தையும் மொழியும்:
சந்தையென்பது
எதைக் குறிக்கிறது? பண்ட உற்பத்தியா ளர்கள் நுகர்வோருடனும், சேவை வழங்குவோர், கலைப்படைப்பாளர்கள்,
ஆகியோர் தமது உற்பத்திகளை தேவைப்படுவோருடனும், பணமுடையோர் தமது பணத்தை தேவைப்படுவோருடனும்,
மூளை உழைப்பா ளர்கள், உடல் உழைப்பாளர்கள் ஆகியோர் தமுது உழைப்பை தேவப்படுவோருடனும் பணத்துக்காக
கொடுத்து வாங்கும் ஒரு பொதுவெளியே சந்தை எனப்படும். இவ்விதம் நோக்கின் சமூகமே ஒரு சந்தைதான்.
இச் சந்தையின் செயற்பாட்டை சுமூக- மாக்குவதற்கான ஒரு கருவியே மொழியாகும். எந்தச் சந்தைகளிலானாலும்
சரி, அந்தச் சந்தையில் மொழி ஒரு கருவி மாத்திரமே. தொழில் தேடவும், தொழில் முயற்சிகளை
வளர்க்கவும், வாணிபத்தை மேற்கொள்ள- வும் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். சந்தையின் சுதந்திரம்
என்பது நுகர்வோர் தமக்குத் தேவையான சரக்கை தாம் வாங்கிக்கொள்ளவும், உற்பத்தியாளர்கள்
தமது சரக்குகளை விற்றுக்கொள்ளவுமான சுதந்திரமா- கும். உழைப்பும் வாங்கவும் விற்கவுமானதொரு
சரக்கேயாகும்.
இச்
சந்தையிலான தனது செயற்பாட்டை சுமூகமாக்கிக் கொள்வதற்காக அவர் எந்த மொழியையும், எத்தனை
மொழியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்; எந்த மொழியையும் கைவிடலாம். அவர் கைவிட விரும்புவது
அவரது “தாய் மொழியாகக்’ கூட இருக்கலாம். அது அவரின் சொந்தவிருப்பம். எவ்வெவ் மொழிகளின்
அறிவை எந்தெந்தளவு தூரத்திற்கு வளர்த்துக் கொள்ளலாம் என்பதுவும் அவரின் உரிமை. சந்தைச்
சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளும் எவரும் தனி மனித மொழி சுதந்திரத்தையும் ஏற்றுக்கொள்ளத்தான்
வேண்டும்.
இந்தக்
கோணத்தில் இருந்து நோக்கினால், சினிமாவுக்கு தமிழ்ப் பெயர் வைக்கக் கேட்டுக்கொண்டதுவும்,
தனியார் பாடசாலைகளில் தமிழைக் கட்டாய பாடமாக்கக் கோருவதும் தமிழர்கள் மீதான தமிழ்த்
திணிப்புத்தானே? ஆங்கிலத்தை தனது சந்தை மொழியாக சுய விருப்ப- முடன் தேர்ந்தெடுத்துவிட்ட தமிழனை ‘தமிழா நீ பேசுவது
தமிழா?’ எனக் கிண்டல் செய்வதுவும் தமிழர்கள் மீதான தமிழ்த் திணிப்புத்தானே? மொழியை
ஒரு கருவியாகக் கருதினால், தனது சந்தைத் தேவைகளுக்காக தாய் மொழியைக் கூட புறந்தள்ளி- வைக்கும்
உரிமை எவருக்கும் உண்டென்பதை ஏற்றுக்கொண்டால் தாய் மொழியேயானாலும் கூட அதைக் கட்டாயப்படுத்த
முடியாது. எந்தெந்த மொழியை எவ்வெவ் இடத்தில் பயன்படுத்திக் கொள்வதென்பதைத் தீர்மானிப்பது
அவரவரின் சொந்த உரிமை. தமிழ் நாட்டவரில் அநேகர் தமது சந்தைப்பொது மொழியாக தமிழுடன்
கூடவே ஆங்கிலத்தையும் தேர்ந்தெடுத்து- ள்ளார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியுமா? தமிழ்நாட்டின் நுட்பமான
சந்தைகள் ஆங்கிலத்தை நோக்கியே நகர்கின்றன என்பதையும் மறுக்கமுடியுமா? அவசியமேற்பட்டால் நாளை ஹிந்தியையும் தேர்ந்தெடுத்துக்
கொள்வார்கள். அதற்கென்ன இப்போ?
ஒரு
நாட்டின் சந்தையில் முழுமையான, நிபந்தனை- களற்ற தனிமனித மொழிச் சுதந்திரம் இருந்தால்தான்
அந்நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சிபெறும். அதுவும் பன்மொழிப் பயன்பாடுள்ள நாட்டில்
பன்மொழித்திறமை அவசியம்.
தேசியப்
பண்பாடும் மொழியும்:
அதே
நேரத்தில், தேசிய பண்பாட்டை உருவாக்குவதிலோ தனிநபர் மொழிச் சுதந்திரம்
நிபந்தனைக்கு
உட்பட்டது. தனி நபர் பூரண சுதந்திரம் என்றொன்று அங்கு இல்லை. இருக்கவும்
கூடாது. ஏனெனில்,
தேசியப் பண்பாடும் தேசியமொழியும் ஒன்றிலிருந்தொன்றைப் பிரிக்க முடியாத
தேசியப் படைப்புகளாகும். தேசியப் பண்பாட்டின் வளர்ச்சிக்கு மிக அதிகமாகத்
துணைபோகும் மொழி எதுவோ அதுதான
அத்தேசப் பிரஜைகளின் தேசியமொழியாகும். அத் தேசிய மொழியில் அத்தேசப்
பிரஜைகள் சரளமாகப் பயிற்ச்சி பெற்றிருப்பது அவசியமானதும்
கட்டாயமானதுமாகும்.
அத் தேசத்தால் தேர்ந்தெடுக்கப்படும் அத்தேசியமொழி அத்தேசத்தின்
பெரும்பான்மையான மக்களின்
மரபுவழிவந்ததாகவும்(தாய்மொழி) இருக்கலாம், மரபொழிந்த நிலையில் இருந்து
மீட்கப்பட்ட
மரபுமொழி- யாகவும் இருக்கலாம், புதிதாக உருவாக்கப்பட்டதாகவும் இருக்கலாம்,
புகுந்த அல்லது
புகுத்தப்பட்ட மொழியாகவும் இருக்கலாம், பிற மொழித் தழுவ- லாகவும்
இருக்கலாம், ஒன்றுக்கு
மேற்பட்ட மொழிகளாகவும் இருக்கலாம். இவற்றில் எது அல்லது எவை
தேசியமொழி/தேசியமொழிகள் என்பதை அத்தேசமே தீர்மானித்துக்
கொள்ளவேண்டும்; மாறாமர- பியல் வாதிகளும் (அடிப்படைவாதிகள்-மொழி தூய்மை-
வாதிகள்) தீர்மானிக்கக்
கூடாது; அதிகாரம் செலுத்தும் அந்நியரும் தீமானிக்கக் கூடாது. ஜனநாயக
வழிமுறையில் அத்
தேசத்தின் மக்களே அதைத் தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.
தேசிய
சந்தையில்
மொழியெனும் கருவுக்குரிய முழுமையான தனிநபர் சுதந்திரம், தேசியப்
பண்பாட்டரங்கினில் மொழிக்கு இல்லை; இருக்கவும் கூடாது. ஏனெனில் தேசப்
பண்பாட்டரங்கில் மொழியானது, பண்பாட்டின் வங்கியாகவும்,
வளர் நிலமாகவும்(விளைநிலமல்ல-பண்பாட்டின் விளைநிலம் மக்களே) செயல்படுகிறது.
அது மடுமல்ல,
தேசிய மொழி தன்மட்டில் தானே ஒரு பண்பாடாகவும் செயல்படுகிறது. தமிழ்
மொழிக்கு அத்தன்மை
உள்ளதை உற்றுநோக்கில் புரிந்து கொள்ளலாம்.
தேசிய மொழி, தேசிய
சந்தை, தேசியப் பண்பாடு, தேச அரசு இவைநான்கும் இருந்தால்தான் ஒரு நாடு தேசம் என்ற நிலையை
அடையும்.
இந்தியாவை
ஒரு முழுமையான, ஏகமான தேசமாக ஏற்றுக்கொள்பவர்கள் அத்தேசத்திற்கான தேசியமொழி- யை அல்லது
மொழிகளை உருவாக்குவது அவசியமே. அவ்விதம் இருந்தால்தான் ஒரு தேசம் வாழும். இல்லையேல்
தேசம் இறந்துவிடும். அல்லது ஊனமுற்ற தேசமாகிவிடும். இந்தியாவை ஒருஏகமான தேசமாக ஏற்றுக்கொள்பவர்களில்
ஒருசாரார், சதுர்-வர்ணத்தையும், பார்ப்பனியத்தையுந்தான் இந்தியாவின் தேசியப் பண்பாடாக
ஏற்றுக் கொள்கிறார்கள். சமஸ்கிருதமும் ஹிந்தியுமே இப் பண்பாட்டிற்க்கு பொருத்தமான மொழி
எனக் கருதுகிறார்கள். அதனால் சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் திணிக்கும் முயற்சியில்
ஈடுபடுகிறார்கள். பௌத்தத்தை இந்திய தேசியப் பண்பாடாக ஏற்றுக் கொள்பவர்கள் பாளி மொழியைத்
திணிக்கலாம், இஸ்லாமியப் பண்பாட்டைத்தான் இந்தியத் தேசியப் பண்பாடாக ஏற்றுக்கொள்பவர்கள்
உருது மொழியைத் திணிக்கலாம், ஐரோப்பிய நாகரிகத்தைத்தான் தமது பண்பாடாகக் கொள்பவர்கள்
ஆங்கில மொழியைத் திணிக்கலாம். இத்திணிப்புகள் எதுவுமே தவறில்லை. அவரவர்கள் தத்தமது
தேசத்துக்கென ஒரு தேசிய மொழியை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவ்வளவே.
தவறு
எதுவென்றால், ஏகத் தன்மை பெற்ற இந்தியத் தேசியப் பண்பாடு என்றொன்று உள்ளதெனக் கருதுவதுதான்
பாரிய தவறு. அவ்விதமொன்று இன்றுவரை உருவாகிவரவுமில்லை உருவாக்கப்படவு- மில்லை. ‘தேச அரசொன்றே’ இல்லாத போது, தேசியப் பண்பாடொன்று எவ்விதம் தோன்றும்? பார்ப்பனிய
சமஸ்கிரத இந்தியா பாளியிடம் தோற்றது. பௌத்த
இந்தியா உருதுவிடம் தோற்றது, மொகலாய இந்தியா ஆங்கிலத்திடம் தோற்றது, திராவிடநாடு எனக்கூறி
சமஸ்கிருதத்துடன் போராடிய திராவிட மொழிகளில் பல சமஸ்கிருத்திடம் அடிபணிந்தன அல்லது
அதனுடன் சங்கமித்தன. ஏற்கனவே தோல்விகண்ட சமஸ்கிருதம், ஹிந்தி மொழியுடன் ஒரு கூட்டமைத்துக்
கொண்டு, இப்போது மீண்டும் ஏகத் தன்மைபெற்ற இந்தியத் தேசியப் பண்பாட்டை உருவாக்கக் களம்
இறங்கியுள்ளது.
இச்
சூழலில், மொழித்திணிப்புக்கு எதிரான போராட்டம் மட்டும் நடத்திப் பலனில்லை. ஏகத் தன்மையற்ற
தேசியப் பண்பாடு தோன்றும் வரை இம்முயற்ச்சியில் எந்த மாநிலமும் வெற்றிகாணப்போவதில்லை.
ஆகவே இந்தித் திணிப்பைத் தடுத்துநிறுத்த வேண்டுமானால், ஏகத் தன்மைபெற்ற இந்தியத் தேசியத்துக்குப்
பதிலாக பல்முகத்தன்மையும், பல்படித்தன்மையும் பெற்ற, அனைத்து மாநிலங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட
‘இந்தியப் பண்பாட்டைத்’
தோற்றுவிப்பதைத் தம்முடைய பிரதான போராட்டமாகக் கொள்ளவேண்டும். இது மேலிருந்து ஏற்படுத்தப்படும்
மாற்றமாகும். இந்திய பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகள் 1946இல் இருந்து இதைத்தான் செய்துவருகிறார்கள்.
மேலிருந்து
எடுக்கப்படும் மாற்றம் சாத்தியமில்லை என்று கருதுபவர்கள்
இந்திய
நாட்டை பல ‘தனித்துவத் தேசியப் பண்பாட்டு’ முழுமைகளின் ஒன்றியமாக
மாற்ற முற்படவேண்டும். அதற்காகப் போராடவேண்டும். தத்தமது மாநிலங்களுக்கான தேசியப் பண்பாடு,
தேசிய மொழி, தேசிய சந்தை ஆகியவற்றிற்காகப் போராடவேண்டும். இது இவர்களின் முதலாவது போராட்ட
முனையாகும். இரண்டாவது முனை இம் முழுமைகளை சுயவ்ருப்புடனான ஒன்றியமாக உருவாக்கப் போராடுவது. இது
கீழிருந்து ஏற்படுத்தப்படும் மாற்றமாகும். மூல திராவிட இயக்கங்களும், திரிபுவாத(புரட்டல்வாத)
திராவிடர் இயக்கங்களும் (தி.மு.க; அ.தி.மு.க; ம.தி.மு.க) இப் பாதையே பின்பற்றிவருகிறார்கள்.
பல்முகத்தன்மையும்,
பல்படித்தன்மையும் பெற்ற ‘இந்தியப் பண்பாட்டைத்’
தோற்றுவிப்பது அல்லது பல ‘தனித்துவத் தேசியப் பண்பாட்டு’
முழுமைகளின் ஒன்றியமாக இந்தியாவை மாற்றுவது ஆகிய இவை
இரண்டுமே சாத்தியமில்லையானால், இலங்கையைப் போல் இந்தியாவும் உள்நாட்டு யுத்தகளமாக மாறி
அல்லலுறப்போவது தவிர்க்க முடியாதது. இதனால் இந்திய மேட்டுக்குடிகளும் பாதிக்கப்படுவார்கள்,
இந்திய உழைக்கும் மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
”இரு மொழியானால் ஒரு நாடு” என்பதைக் கணக்கில் கொள்ளாமல், ஒரு மொழியாகியதால் இரு நாடுகள்
எனும் நிலைக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையின் சோகக்கதை இந்தியாவுக்கு வேண்டாம். அனைத்து
மாநில மொழிகளையும் தேசிய மொழிகளாகக் கொண்ட இந்தியாவை நோக்கிப் பயணிப்போம்.