Saturday, 29 April 2017
“சமதர்ம குவிமைய ஐந்தியல் கோட்பாடு”- அறிமுகம்
“சமதர்ம
குவிமைய ஐந்தியல் கோட்பாடு”-
அறிமுகம்
தெற்காசிய சமூக
உருவாக்கத்தில் காணப்படும் வளர்திசைக் குணாம்சமுடைய (Posotive isms) இயல்களை பின்வரும் ஆறு தலைப்புகளின் கீழ்
பட்டியலிடமுடியும். அவையாவன:
1.
நாட்டுப்பற்றியல்
Partiotism
2.
தேசிய
விடுதலை இயல்-National Liberationaism (தேசங்கள், தேசிய இன குழுமங்கள்(Ethno-Nationalism), ஆதிக்குடியினர்(indigenous), பழங்குடியினர்(Tribalism) பிரதேசவாதம்(regionalism) ஆகியவை.
3.
சாதி
ஒழிப்பியல்( இந்தியப் பயன்பாட்டில் இது தலித்தியல்)
4.
ஆண்
சமூக-பேரகங்கார ஒழிப்பியல். Feminism
5.
மத
சார்பின்மையியல்- Secularism
6.
சமதர்ம
இயல்
இச் சமூகத்தை முன்னோக்கி
நகர்த்திச் செல்வதில் இவ் ஆறு இயல்களினதும் இயங்குவிதிபற்றிய கோட்பாடே “சமதர்ம
குவிமைய ஐந்தியல் கோட்பாடு” என குறிக்கப்படுகிறது.
இவ் ஆறு இயல்களும்
வளர்திசை இயல்களாக இருக்கும் போது, சமதர்ம இயலை இதிலிருந்து வேறுபடுத்தி உயர்வான இடத்தில்
வைத்தது ஏன்? சமதர்மம் தவிர்ந்த பிற ஐந்து வளர் திசை இயல்களும் தெற்காசிய சமூக உருவாக்கத்தின்
தனித்தனி நிகழ்வுப்போக்குகளுக்கானவை. இவற்றால் சமூகத்தின் ஒட்டுமொத்த பிரச்சனைக்கான
தீர்வை வழங்க முடியாது. ஆனால் சமதர்ம இயல் அவ்விதமல்ல. அது சமூக உருவாக்கத்தின் ஒட்டுமொத்த
நிகழ்வுப் போக்குக்குமானது. சமூகத்தின் ஒட்டு மொத்த பிரச்சனைக்குமான தீர்வை வழங்கக்
கூடிய தன்மை அதற்க்கு மட்டுமேயுண்டு. இதனால், சமதர்ம இயல் தனித்துச் செயற்படும் அதேவெளை
எனைய ஐந்து இயல்களின் குவிமையமாகச் செயற்படவேண்டிய அவசியம் உள்ளது. சமதர்ம இயலின் இத்
தனிவிசேடத் தன்மையின் காரணத்தால்தான் பிற ஐந்துடனும் இது சேர்க்கப்படவில்லை. எனவேதான்
இக்கோட்பாடு “சமதர்ம குவிமைய ஐந்தியல் கோட்பாடு” என
அழைக்கப்படுகிறது.
“குவிமையம்” என்பது எதைக்குறிக்கிறது?
சமதர்ம இயல் தவிர
பிற ஐந்து இயல்களும், தவிர்க்க முடியாமல் ஓரிடத்தை நோக்கிக் குவியும்; குவிந்தேயாகவேண்டும்.
இது இயல்பாகும். இன்றைய சமூக சூழலில் அவை ஒன்றில் முதலாளித்துவ சீர்திருத்தத்தை நோக்கிக்
குவியவேண்டும், அல்லது சமதர்ம சமூக ஒழுங்குகளை நோக்கிக் குவியவேண்டும். இந்த இரண்டில்
எதுவும் நடக்கலாம். சமதர்மத்தை நோக்கிக் குவியவேண்டும் என்பதே இக்கோட்பாட்டின் குறிக்கோளாகும்.
அடுத்தபக்கத்தில்,
வர்க்கப்போராட்டத்தைத்தான் தமது அடிப்படைப் போராட்டமாக கருதிச் செயற்படும் சமதர்மவியல்
கோட்பாட்டாளர்கள், அதேவேளை முன்க்கூரிய ஐவகைப் போராட்டங்களையும் வர்க்கப்போராட்டத்தை
நோக்கிக் குவிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். ஐவர் ஒரு குவிமையத்தை நோக்கி நகர்கிறார்கள்,
சமதர்மவாதிகளோ ஒரு குவிமையத்தை உருவாக்குகிறார்கள். இதுதான் குவிமையம் என்பதன் அர்த்தமாகும்.
சமதர்மத்தை நோக்கிக்
குவியவேண்டும் என்பதே இக்கோட்பாட்டின் குறிக்கோளாகும் எனக் கூறுவது எதற்காக?
அவ்விதம் குவியவில்லையேல்,
இவ் ஐந்து இயல்களையும் அடித்தளமாகக் கொண்டு எழும் வீரமிகு போராட்டங்கள் அனைத்தும் ஒன்றில்
விழலுக்கு இறைத்த நீராகிப்போகும் அல்லது வல்லரசியத்தால் காவுகொள்ளப்படும் அல்லது இவ்
இயல்களின் எதிர்முனையை நோக்கி நகர்ந்து புரட்சிகர பரிமாணத்திற்குப் பதிலாக நாசகாரப்
பரிமாணத்தை எடுப்பதில் முடிவடையும். இது இயல்பானது. இது ஒரு பக்கம்.
அடுத்தபக்கத்தில்
இவ் ஐந்து இயல்களினதும் குவிமையமாக மாறத்தவறும் சமதர்மவியல், ஒன்றில் இவ்வியல்களின்
வால்பிடியாக மாறும் அல்லது தத்தமது நாட்டின் மேட்டுக்குடிகளின் வால்பிடியாக மாறும்.
இவ் வால்பிடிஇயலே நவீன திரிபுவாதம், நவ-நவீன திரிபுவாதம் எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது.
சமதர்மத்தை
குவிமைய இயலாக மாற்றுவதன் மூலமே சமதர்ம இயல் தன்னை மீழ் உற்பத்தி செய்து கொள்ள முடியும்.
அப்போதுதான், அப்போது மட்டுந்தான் தெற்காசிய சமூகம் சமதர்மக் கட்டமைப்பை நோக்கி வெற்றிகரமாகப்
பயணிப்பதை உத்தரவாதப் படுத்தமுடியும்.
ஆனால்,
குவிப்பதுவும், குவிவதுவும் கட்டாயப்படுத்தப்பட்டதாக அமையக் கூடாது, இயல்பானதாக அமையவேண்டும்.
ஏடறிந்த
வரலாற்றுக் காலத்தில் இருந்து தெற்காசியா பண்பாட்டுக்கட்டுமானத்தில் நடந்துவரும் அறநெறிப்போராட்டத்திற்கு
புகழ்பெற்ற பிரதேசமாகும். இதன் வரலாற்று முக்கியத்துவம் சாதாரணமானதல்ல. அவ்விதமிருக்க
அறவியலையும் ஒரு இயலாகச் சேர்த்துக்கொள்ளாதது ஏன் எனும் கேழ்வி எழுகிறது. வரலாற்று
வழிவந்த அறெநெறிப் போராளிகள் அனைவரும் அற இயலெனும் ஒரு தனி இயலைக் கொண்டிருக்க வில்லை.
சாதி
ஒழிப்பியல்( இந்தியப் பயன்பாட்டில் இது தலித்தியல்) ஆண் சமூக-பேரகங்கார ஒழிப்பியல். Feminism
மத சார்பின்மையியல்-
Secularism
ஆகிய மூன்று இயல்களில்
ஏதோ ஒன்று அல்லது அனைத்தும்தான் அவர்களின் இயல்களாக இருந்துள்ளன. அகவேதான் அது ஒரு
தனி இயலாக எடுக்கபடவில்லை. 15/04/17 சனிக்கிழமை
Vidiyal is for What?
Vidiyal is a theoretical Campaigner for Stability and
Equality in Southasia.
To achieve this End, Vidiyal want our Region (Southasia)
I.
to be free from aliens’ forced interventions /interferences.
II.
to be free from all sort of national,
ethno-national, tribally discriminations.
III. to be
free from all sort of gender discriminations.
IV. to be free from all type of religious discriminations.
V.
to be free from all type of social norms and
traditions based on Casteism.
VI.
to be free from labor exploitation and wealth exploitation.
Vidiyal is for theoretical contributions
towards the formation of such a region.
Vidiyal assumes that, promoting
these six core goals depend on the correct understanding of the following theories
(isms).
1.
Patriotism
2.
Nationalism, Federalism, ethnic-nationalism,
Tribalism, Regionalism
3.
Gender Equalitarianism
4.
Secularism
5.
Anti-Casteism
6.
Socialism
Vidiyal proclaim that these six ‘isms’
are highly integrated, and function as the decisive ‘isms’ in our region. And,
declare that socialism shall be achieved only by implementing Socialism as the
central focal(nucleus) of all other ‘isms’. Vidiyal theorize the positive dynamics
of these six ‘isms’ as “Socialist centered five ‘isms’ Theory”.
Vidiyal is for Propagating and
developing this theory.
No comments:
Post a Comment