Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Thursday, 10 October 2019

ஜின்பிங் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.!


இந்திய, மக்கள் சீன நட்பை வழர்த்தெடுப்பத்றாகாக வருகைதரும் மக்கள் சீனக் குடியரசுத் தலைவர் ஜின்பிங் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.!
           அமெரிக்க வல்லரசின் ஆதிக்கத்தில் இருந்து உலகம் முழுமையும் விடுவிக்கப்படவேண்டுமென விரும்புவோர்களின் சார்பிலான வரவேற்பு.
           தற்போதைய இந்தியரசு அமெரிக்க வல்லரசுடன் சமரசம் செய்ய முற்படுகிறது என்பதைப் பொருட்படுத்தாமல், இந்தியாவுடன் நட்பைப் பேணுவதற்கான உங்கள் தொடர் செயல் பாராட்டுகுரியது.
            அமெரிக்க வல்லரசின் பொருளாதாரக் கட்டுமானம், மீழ நிலைநிறுத்தப்பட முடியாதளவிற்கு, உள்ளும் புறமும் வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது என்ற உங்கள் புரிதல் மிகச் சரியானது.
ஆனால், இராணுவரீதியில் வீழ்ச்சியென்ற கட்டத்தை இன்னமும் எட்டவில்லை. சோவித்யூனியனின் வீழ்ச்சிக்குப்பின், உருவாகிய தனது உலகளாவிய இராணுவ ஆதிக்கத்தையும் வல்லமையையும் இன்னமும் தக்கவைத்துக் கொண்டேயுள்ளது. ஆனால், ஈராக் யுத்த முன்னும், பின்னுமான அமெரிக்காவின் உலகளாவிய இராணுவ ஆதிக்கமும் வல்லமையும், ஒன்றுக்கொன்று எதிரெதிர் குணாம்சங்களைக் கொண்டவையாகும்.
                   ஈராக் யுத்த முன் உலகின், ஏகப்பெரும்பான்மையான அடக்கப்பட்ட நாடுகளின் பொருளாதாரம் அரை-காலனியல் பொருளாதார மாகவே இருந்தது, இப்பொருளாதரங்களும், அவற்றின் அரசுகளும், அமெரிக்கா உட்பட ஏகாதிபத்தியப் பொருளாதாரங்களின் கொத்தடிமை களாகவே இருந்தன. இதனால், அரை-காலனியல் அரசுகளுக்கும் ஏகாதிபத்திய அரசுகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் சிநேக முரண்பாடுகளாகவே இருந்தன. இவ் அரை-காலனியல் நாடுகளின் மக்களுக்கும், அவ் அரசுகளு க்கும் இடையே அடிக்கடி பகை முரண்பாடுகள் தோன்றினாலும், இத் “தேசிய” அரசுகளே, ஏகாதிபத்திய இராணுவத்தின் உதவியுடன் மக்களை அடக்கின.
ஆகவே அரை-காலனியல் நாடுகளின் “தேசிய இராணுவங்கள்” வல்லரசு இராணுவங்களின் நண்பர்களாகவே இருந்தன. இதனால், வல்லரசு இராணுவங்கள் உலகளவில் தமது வளர்திசை நிலையிலேயே இருந்தன.
                  உலக வரலாறு நகர்ந்தது, நிலப்பிரபுத்துவத்தை அடித்தளமாகக் கொண்ட அரை-காலனியல் பொருளாதாரம், முதலாளித் துவத்தை அடித்தளமாகக் கொண்ட நவ-காலனியல் பொருளாதாரமாக மலர்ச்சி பெற்றது. இதனால், அரை-காலனியல் அரசுகள், நவ-காலனியல் அரசுகளாக வழர்ச்சி பெற்றன. அதாவது பொருளாதாரக் கட்டுமானமும் அரசக் கட்டுமானமும் வளர்திசைக் குணாம்சமாற்றம் பெற்றன. இதனால் வல்லரசுகள் தமது உலகளாவிய பொருளாதார நண்பர்களையும், இராணுவ நண்பர்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டது. அவர்களில் பலர் எதிரிகளாக மாறினார்கள். இதனால், வல்லரசுகள், நவ-காலனியல் நாடுகளுடன் (மூன்றாம் உலக நாடுகள்) இராணுரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நேரடியாக மோதிக்கொள்ள தொடங்குகின்றன. (இவற்றில் ஒன்றுதான் ஈராக் யுத்தம்.)
இதனால் வல்லரசுகளின் வளர்திசை(ஏறுநிலை) இராணுவ வல்லமை, தேய்திசை(இறங்குநிலை) இராணுவ வல்லமையாக, தாக்குதல் நிலை இராணுவ வல்லமை, தற்காப்பு நிலை இராணுவ வல்லமையாக மாற்றமுறத் தொடங்குகிறது. இது ஒரு பாரிய குணாம்சமாற்றமாகும். அமெரிக்க வல்லரசு இந் நிலைக்கு உள்ளாகி சில வருடங்கள் கடந்து விட்டதற்கு, வட கொரிய, ஈரானிய, பாலஸ்தீனிய நாடுகளின் நிகழ்வுகள் சிறந்த உதாரணங்களாகும். இனியொரு ஈராக் கடைசிவரை நடக்காது என்பது நிச்சயமாகிவிட்டது.
++ இம்மாற்றத்தை மிகத் தெழிவாகப் புரிந்து கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.
++அமெரிக்க மேலாண்மையில் இருந்து விடுபட்டதோர் புதிய உலகை அமைப்பதில் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
++ஸ்ராலின் தலைமையிலான சோவியத் யூனியனால் செய்ய முடியாது போன காரியத்தை நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறோம்.
A.Gowrikanthan



No comments: