Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Sunday, 9 August 2015


தொடர்- 2

நாடு என்று கூறக்கூடிய கட்டுமானங்களில் பிரதானமானவை அனைத்துமே சிதைவடைந்துள்ள நிலையில் “ இரு தேசம் ஒரு நாடு” எனும் கோட்பாடு ஒரு வலதுசாரி விலகலா” எனும் கட்டுரையின் இரண்டாவது தொடர்.
முதல் பகுதியில் இக்கோட்பாட்டின் தெற்காசிய மூலம் இந்தியா என்பதையும், அவ் இந்தியாவில் நாடு என்ற கட்டுமானம் இருந்த இடத்தில் இந்து தேசம், இஸ்லாமிய தேசம் இனும் இரு கட்டுமானங்கள், தோன்றியிருப்பதையும், இருந்த போதும் இந்திய நாடு எனும் கட்டுமானம் இன்னமும் பலம்பெற்ற ஒரு எதிரோட்டமாக இருந்து வருகிறது என்பதையும், அதே வேளை இலங்கையெனும் நாட்டுக்கான கட்டுமானம் இருந்த இடத்தில் சிங்ஹள-பௌத்த தேசம் எனும் கட்டுமானம் ஆளக் காலூன்றி, முழு இலன்கையையும் தனது சிறைக்கூடமாக்கியுள்ளதையும், இதனால் இலங்கை நாடு எனும் கட்டுமானங்களில் பிரதானமானவை அனைத்துமே சிதைவடைந்து காணப்படுவதையும் சென்ற தொடரில் நோக்கினோம். இன்றைய இலங்கையில் ”இரு தேசம் ஒரு நாடு” எனும் கோரிக்கை செல்லுபடியாகுமா? இது இல்லாவிடத்துக்கு வழிகாட்டுவதாகாதா? போன்ற கேள்விகள் எழுகின்றன? பதில் காணமுற்படுவோம். என நிறுத்தினோம்.
தொடர் 2 ற்க்குத் தொடர்வோம். விவாதத்திற்குரிய இக்கோட்பாட்டின் முன்வைப்பில் ஒரு குளப்பம் நிலவுகிறது. இக்கோட்பாட்டை “இரு தேசம் ஒரு நாடு” என அழைப்பதா அல்லது “ஒரு நாடு இரு தேசம்” என அழைப்பதா என்பதுவே அக்குளப்பமாகும். இவை இரண்டும் ஒரே கோட்பாட்டைக் குறிப்பதாகவே கூறப்படுகிறது. ஆனால் இவை இரண்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடுண்டு. இரண்டும் வெவ்வேறு கோட்பாடுகள் என்பதே எனது கருத்தாகும்.

“ஒரு நாடு இரு தேசம்” என்பது நாட்டை முதன்மைப்படுத்துகிறது. நாட்டின் நலனில் நின்றே தேசத்தின் நலனை அணுகுகிறது. இங்கு நாட்டுப் பற்றே (patriotism) முதன்மைப்படுத்தப் பட்டுகிறது. தேசியப்பற்று (nationalism) அதற்குக் கீழ்படுத்தப்படுகிறது. “ஒரு நாடு இரு தேசம்” என்றால் நாட்டுப்பற்றே உயர்ந்ததாகின்றது. இலங்கையின் பிரத்தியேக நிலையை கணக்கில் கொண்டால், நாடு என்பது இலங்கை, தேசம் என்பது ஸ்ரீ லங்காவும் தமிழீழமுமாகும். இதன் படி “ஒரு நாடு இரு தேசம்” கோட்பாட்டாளரகள் தமது நாடு தொடர்பான சிந்தனையுள்ளவர்களாக (இது முதன்மையானது) இருக்கும் அதேவேளை தமது தேசம் தொடர்பான சிந்தனையுள்ள வர்களாகவும் இருக்கவேண்டும்.

அதே நேரத்தில் இதற்கு எதிர்மாறாக, “இரு தேசம் ஒரு நாடு” எனும் கொட்பாடு, இரு தேசங்களின் நலன்களை நாட்டு நலனுக்கு கீட்பட்டுத்துகின்றது என்று கூறலாமா? இல்லை, இல்லவேயில்லை. நாட்டு நலனில் அக்கறையுள்ள அரசியல் உணர்வாளர் அந்நாட்டில் உள்ள அனைத்து தேச, இன, தேசிய இன, மத, சாதிய, பாலினப் பிரிவுகளினதும் நலநில் அக்கறையுள்ளவராக இருப்பார். இவ் அனைத்து நலன்களினதும் கூட்டுத்தொகுப்புத்தான் நாட்டுநலனாகும். ஆனால், இலங்கையில் வாழும் தேசியப்பற்றாளன் ஒன்றில் சிங்ஹள-பௌத்த தேசியப் பற்றாளனாக இருப்பான் அல்லது தமிழீழத் தேசியப்பற்றாளனாகத்தான் இருப்பான். நாட்டுப்பற்றை நிராகரித்த தேசியப் பற்றாளன் தனது தேசத்தைத்தவிர மற்றைய தேசத்தை வெறுப்பவனாகவே இருப்பான். ஒன்றில் தமிழீழ வெறுப்பாளனாக இருப்பான் அல்லது சிங்ஹள பௌத்த தேச(ஸ்ரீ லங்கா) வெறுப்பாளனாக இருப்பான். ஆகவே அவன் இரு தேச நலன்களையும் நாட்டு நலனுக்கு உட்படுத்தவில்லை மாறாக தனது சொந்த தேச நலனை மட்டுமே முதன்மைப்படுத்துபவனாகும்.

சில எடுத்துக்காட்டுகள்:

1) இஸ்லாமியர்களை துன்புறுத்துவதுவும் அவர்களின் தேசியத்தைப் (Nation Hood) தமது தேச நலனுக்கு அவசியமானதானால் அதச் செயல்படுத்துவதற்கு இலங்கையின் இரு தேசியங்களும் எந்த தயக்கமும் காட்டுவதில்லை.

2) தமது தேச நலனுக்கு அவசியப்படுமானால் இலங்கை நாட்டு நலனுக்கு எதிரான எந்த அந்நிய சக்திகளுடனும் இணைவதில் இலங்கையின் இரு தேசியங்களும் எந்த தயக்கமும் காட்டுவதில்லை.

3) நாட்டின் வளர்ச்சியில் நாட்டமுள்ள ஊடக ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பது தமது தேசிய நலனுக்கு அவசியமானதானால் அதைச் செய்வதில் இலங்கையின் இரு தேசியங்களும் எந்த தயக்கமும் காட்டுவதில்லை.

4) மரபுவழி கொத்தடிமைக் கூலிகளை நவீன பண்ணையடிமைக் கூலிகளாக மாற்றுவது (மலையகத் தொழிலாளர்களை) தமது தேசிய நலனுக்கு அவசியமானதானால் அதைச் செவதற்க்கு இலங்கையின் இரு தேசியங்களும் எந்த தயக்கமும் காட்டுவதில்லை.

5) யுத்த விதிமுறை மீறல்கள் செய்வது (குறிப்பாக சரணடைந்த துருப்புக்களை படுகொலை செய்தல்), மக்களை தொடர்ந்து திகில் நிலையில் வைத்திருப்பது தமது தேசிய நலனுக்கு அவசியமானதானால் அதைச் செவதற்க்கு இலங்கையின் இரு தேசியங்களும் எந்த தயக்கமும் காட்டுவதில்லை.
ஆகவே “இரு தேசம் ஒரு நாடு” எனும் கோட்பாடு, சிங்ஹள-பௌத்த மேலாண்மைவாதிகளின்(supremacist) “ஒரு தேசம் ஒரு நாடு” எனும் கோட்பாட்டின் மீது அணியப்பட்ட பட்டாடையேயாகும். அதாவது ஜனநாயக வேடம் தரித்த ஒரு supremacist கோட்பாடே “இரு தேசம் ஒரு நாடு” ஆகும்.
 

அடுத்த பக்கத்தில், “ஒரு நாடு இரு தேசம்” எனும் கோட்பாடு ஜனநாயகத் தன்மைமிக்க முற்போக்குக் கோட்பாடாகும். இதுதான் இலங்கையில் காணப்படும் தேசிய, தேசிய இன, மத, சமூகக் குளுமங்கள் அனைத்தும் ஒருவரோடு ஒருவர் இசைபடவும், பகிர்ந்துண்டும் வாழக்கூடிய ஒரு சமூகக் கட்டுமானத்தை ஏற்படுத்தக் கூடிய வலுவான கோட்பாடு இதுவேயாகும்.

இலங்கையில் ”இரு தேசம் ஒரு நாடு” எனும் கோரிக்கை செல்லுபடியாகுமா? இது இல்லாவிடத்துக்கு வழிகாட்டுவதாகாதா? போன்ற கேள்விகள் எழுகின்றன? இது இல்லாவிடத்துக்கு வழிகாட்டுவதாக அமையவில்லை. பொல்லாத இடத்துக்கு வழிகாட்டுவதாகவே அமையும். தமிழீழத்திற்கு இன்னோர் மஹிந்த-கோத்தபாயா கூட்டு தேவையா?
“இரு தேசம் ஒரு நாடு”, “ஒரு நாடு இரு தேசம்” எனும் கோட்பாடுகள் பற்றிய விவாதத்திற்கு மீளவும் ஒரு தடவை வருவோம். தற்போது, இலங்கை உடபட தெற்காசிய வரலாற்றுப் பின்னணியில் “நாடு”, “தேசம்” என்பனவற்றின் அரசியல் உள்ளடக்கம் என்ன என்பதை நோக்குவோம். அப்போதுதான் “ஒரு நாடு இரு தேசம்” எனும் கோட்பாட்டின் அடிப்படையிலான வேலைத்திட்டத்தை வகுப்பது எனபது பற்றிய விவாதத்துள் செல்லமுடியும

No comments: