Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Sunday, 16 August 2015

Arinesaratnam.Gowrikanthan



இலங்கையில் மேலும் கூர்மையடையவிருக்கும் அமெரிக்க- பிரிக்ஸ்(BRICS) மோதல்கள்.

ஜே.ஆர்-ரஜிவ் உடன்படிக்கையானது இந்திய-அமெரிக்க முரண்பாடு இலங்கையில் வெளிப்படையாகச் செயல்படத் தொடங்கியதன் ஆரம்பமாகும். ஸ்ரீ லங்காவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான சமாதான உடன்படிக்கை இம்முரண் பாட்டை மேலும் ஒரு கட்டத்திற்கு வளர்த்தெடுத்தது. ஆனால், விடுதலைப் புலிகளை அழிப்பதிலும், ஆசிய நாடு இதுவரை கண்டறியாத இன அழிப்பை நடத்துவதிலும், பௌத்த-சின்ஹள பேரகங்காரவாத அரசியலை நாடு தழுவிய அளவில் வெற்றிபெற வைப்பதிலும் அமெரிக்க, பிறிக்ஸ் தரப்பினர் அனைவரும் ஒன்றுபட்டே செயல் பட்டனர். அனைத்துத் தரப்பினரும் தமது ஒத்துழைப்பை வளங்கினாலும், அவ்வொத் துழைப்பு எவ்விதமானது என்பதில் இவர்களிடையே வேறுபாடு இருந்தது. இந்தியா உட்பட பிறிக்ஸ் தரப்பு குறிப்பாக சீனா, ஸ்ரீ லங்கா அரசையும், மஹிந்த அரசாங்கத் தையும் நேரடியாகப் பலப்படுத்துவதாகவே இருந்தது. அதாவது, அரசும் அரசாங்கமும் யுத்தத்தின் பின்பும் நிலைத்து நிற்கக் கூடிய முறையிலேயே இவ் ஒத்துழைப்புகள் இருந்தன. அதேவேளையில், அமெரிக்கத் தரப்போ யுத்தத்தில் வி.பு-களை பலவீனப் படுத்தக் கூடிய முறையில் நடந்துகொண்டதே தவிர, மஹிந்த அரசாங்கம் தொடர்ந் தும் நிலைத்து நின்று பிடிக்கக் கூடியதாகவோ அல்லது வி.பு-களை முழுமையாக அழிக்கக் கூடியதாகவோ அமைந்திருக்கவில்லை. ஆகவே ஒத்துழைப்பதில் இவ்விரு தரப்பினரும் ஒன்று பட்டிருந்தாலும் ஒத்துழைத்தற்கான குறிக்கோளில் நேரெதிர் வேறுபாடுகள் இருந்தன. யுத்த அழுத்தத்தினால் மஹிந்த அரசாங்கம் தமக்குப் பணியுமென்பதே அமெரிக்கத் தரப்பின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.

அடுத்தபக்கத்தில் மஹிந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதில் பிறிக்ஸ் தரப்போ உறுதியாகச் செயல்பட்டது. தோல்வி கண்ட அமெரிக்கத் தரப்புர் யுத்தத்தின் போதான மனித உரிமைமீறலை முன்வைத்து மஹிந்த அரசாங்கத்தைப் பதவி நீக்கம் செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடக் கிளம்பினர். ஆனால், தமது சொந்தப் பலவீனத்தின் காரணத்தாலும், பிறிக்ஸ் தரப்பினரின் கடுமையான எதிர்ப்பின் காரணத்தாலும் அவர்களால் குறிப்பிடக்கூடிய எந்த வெற்றியையும் இதுவரை பெற முடியவில்லை. பிறிக்ஸ் உலகிடம் மீண்டும் தோற்றுப்போயினர். மஹிந்த அரசாங்கத் தைப் கலைப்பதற்கு அவர்களால் கையாண்ட மாற்றுவழிதான் 2015 “ஜனவரி 8 ஜனநாயகப் புரட்சியாகும்”. இவ் “ஜனநாயகப் புரட்சியை’ நடத்திவைப்பதில் இந்திய அரசின் பங்களிப்பும் இருந்துள்ளது என மஹிந்த தரப்பினர் கூறுகின்றனர். அமெரிக்கத் தரப்பிற்கும் பிறிக்ஸ் தரப்பிற்கும் இடையேயான முரண்பாடே இன்றைய உலகின் பிரதான முரண்பாடாகும். இப்புரிதலுடன்தான் இந்திய-சீன முரண்பாடு கையாளப்படவேண்டும். இது ஒரு நட்பு முரண்பாடே. இந்தியாவுக்கு இப்புரிதல் உள்ளது என்பதை அதன் சமீபத்திய செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஆகவே ”ஜனநாயகப் புரட்சிக்கு” இந்தியாவும் ஒரு காரணி என்பதை ஏற்றுக்கொள்வது கடினமாகத்தான் உள்ளது. இந்தியாவின் அயலுறவுப் பாதுகாப்புக் கட்டுமானத்தில் அமெரிக்க ஊடுருவல் இருந்திருக்கக் கூடும்.

தமது கையாட்களை ஆட்சியில் அமர்த்துவதற்காக நடத்தப்பட்ட இந்த “ஜனவரி 8 ஜனநாயகப் புரட்சி”யும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. மூன்று காரணங்கள்.
முதலாவது, தோல்விகண்ட மஹிந்த அணி தமது தொல்வியை ஏற்றுக்கொண்டு அரசியல் ஜனநாயக நாகரிகத்துடன் பதவி விலகிக் கொண்டமை, இதனால் அமெரிக்காவின் ஆட்சிக்கவிழ்ப்புக் கலையான நிறப்புரட்சியை இலங்கையிலும் நடத்துவதற்கான சாத்தியப்பாடு தவிர்க்கப்பட்டது.

இரண்டாவது, இப்புரட்சியின் மிகப்பெரும் சாதனையாகக் கருதப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம் குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ளக்கூடிய நம்பிக்கை எதையும் இலங்கை மக்களிடையே ஏற்படுத்தவில்லை.
மூன்றாவது, புதைக்கப்பட்டதாக கருதப்பட்ட மஹிந்தவின் உடல் மீண்டும் வீறுகொண்டு உயிர்பெற்று எழுந்து விட்டது. அவரே பிரதமாரகத் தேர்ந்தெடுப் பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் கருதப்படுகிறது.
தனது கட்சித்தலைவரெனும் அதிகாரத்தைப் பிரயோகித்து அதைத் தடுப்பேன் என மைத்திரிபால செனநாயக்கா பகிரங்கமாக அறிவித்தும் விட்டார். இதன்மூலம் தேர்தல் முடிவு என்னவாக அமைந்தாலும் சரி தேர்தலின் பின்பு அமெரிக்க-பிறிக்ஸ் முரண்பாடு கூர்மையடையும் என்பதையும், அது தனது ஆசியுடன் தான் அமையும் என்பதையும் ஜனாதிபதியவர்கள் பிரகடனப்படுத்திவிட்டார். எதோவோர் அசம்பாவிதம் நடக்கப்போவது உறுதியாகி விட்டது. அது நடமுறைப்படுத்த முடியாது போன நிறப்புரட்சியை முன்னெடுப்பதாக அமையுமா அல்லது மீண்டும் ஒரு சதியாக அமையுமா, அல்லது மீண்டும் ஓர் பொருளாதார முற்றுகையாக அமியுமா என்பது தெரியவில்லை. இலங்கை மண்ணில் அமெரிக்க-பிறிக்ஸ் முரண்பாடு மேலும் கூர்மையடையவுள்ளது என்பதை மட்டும் நிச்சயித்துச் சொல்லமுடியும்.
அமெரிக்காவின் சொந்தப் பலவீனங்கள் பற்றிய விபரம் “ உறக்கநிலை கலையும் ஆசியாவும், நிலைதடுமாறு நிலை அடைந்துவரும் அமெரிக்காவும்” எனும் தலைப்பின்கீழ் வெளிவரும்.

No comments: