“ஞானோதேயம்!” பெற்ற
ராகுல் காந்தி
அதிகாரங்களைத் துறந்து, அதிகாரங்ளுடனான தொடர்புகளை அறுத்தெறிந்து, வேத ஆகமங்களுக்கு எதிரான தத்துவார்த்தத் தேடலில் அலைந்து திரிந்தார், சித்தார்த்தர்(கௌதம
புத்தர்). நீண்டதேடலின் பின்னர்தான், இறுதியாக பிராமணியத்திற்கு எதிரான தத்தவஆயுதத்தைப்
பெற்றுக் கொண்டார் இதுதான் அவர்பெற்ற ஞானோதயமாகும்.
தனது தந்தையின்கொலையில் சம்மந்தப்பட்டவர்களாக
கருதப்படுபவர்களில் எந்தக் கோபமும் இன்மை, தனது தந்தையைக் கொன்றவனாகக் கருதப்படும் பிரபாகரன்
கொல்லப்பட்டதாலான இரக்கம், அவர்களை மன்னிக்கும் ‘உயர்ந்த குணம்’ ஆகியவைதான் ராஜீவின்மைந்தன் பெற்ற ஞானோதயமாகும்.
ஆனால், தான் கட்சியின் அதிகாரத்துக்கு வந்ததுள்ள நிலையில், தன்னையும் தனது கட்சியையும் அதிகாரத்துக்குக் கொணரும் முயற்சியில் தீவிரமாக களம் இறங்கியுள்ள நிலையில், இந்தியத் “தேசிய” அரசியலை மதசார்பு அரசியல், மாதசார்பற்ற அரசியல் என
இரண்டாகப் பிரித்து, தங்கள் குடும்பஆதிக்க அரசியலை, (இது மிதவாத அரசியல்) இந்திய ஒன்றியத்தின்மீது செலுத்திவந்த மரபுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள
நிலையில் (மூன்றாவது அணிக்கான அறைகூவல்) தமிழர்களை மனதார கவர்வதற்கானதோர் அரசியல்
சர்தர்ப்பவாத ஆயதமே ராகுலின் ஞானோதயமாகும்.
அவரின் ஞானோதேயம்
இத்துடன் நிற்குமா அல்லது தொடருமா? வட-கிழக்கு இணைந்த மாகானசபை அமைப்பை உத்தரவாதப் படுத்தவதற்கான சரத்துகள்
எதுவுமே இல்லாத ராஜீவ் -ஜே.ஆர் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவைப்பதற்காக 3D (Dimpu, Detention, Deportation, காட்டி போராளிகளைப் பணியவைத்தமை; இந்திய அமைதிப்படையை அனுப்பி தழிழீழப் போராளிகளை இரு கூறுகளாக்கியமை; இதில் ஒரு சாரரின் ஆயுதங்களைக் களைந்தமை, இரு
சாரருக்கும் இடையில் மோதலை உருவாக்கியமை; போராளிகளின் ஒரு சாராருடன் சேர்ந்து கொண்டு போராளிகளின் இன்னோர் சாராரை அழிக்க
முற்பட்டமை; இது முடியாது போனநிலையில், இலங்கை ஜனாதிபதி ஆர்.பிரேமதாச, J.V.P ஆகிய இருசாரரையும் நேரடியாக எதிர் கொள்வதைத்
தவிர்ப்பதற்காக அவசர அவசரமாகப் துண்டைக் காணோம் துணியைக் காணோம் எனப் புலம்பியவண்ணம் பின்வாங்கியமை; இதன் மூலம் இந்திய தேசத்திற்கு ஒரு தலைகுனிவை உலக அரங்கில்
ஏற்படத்தியமை; இந்திய அரசின் ஆயுத மிரட்டலுக்கு எதிராக தலைநிமிர்ந்து நிற்க முடியும் எனும் துணிச்சலை ஸ்ரீலங்கா அரசுக்கு
ஏற்படுத்தியமை போன்ற நடவடிக்கைகளையிட்டு ராகுல் என்ன
கூறப்போகிறார். இவை அனைத்தும் இவரது தந்தையின் நேரடித் தலைமையில்
நடைபெற்றன வையாகும். ராகுல் உண்மையான ஞானோதயம் பெற்றிருந்தால், தனது தந்தையின் இச்
செயல்களை ராகுல் கண்டித்திருக்க வேண்டும். தனது தந்தையின் சார்பில்
தமிழீழ மக்களிடமும், சிங்கள தேசத்திடமும் மன்னிப்புக் கேட்கவேண்டும்.
தனது தந்தை இந்திய முன்னாள் பிரதமர் என்பதைப் பொருட்படுத்தாமல் வெறுமனே தனது தந்தையாக
மட்டும் கருதி, கொலையில்
சம்மநதபட்டவர்கள் மீது கழிவிரக்கப்படல்
மனிதநேயத்தின் அடிப்படையில்
நியாயப்படுத்தக் கூடியதானல், தந்தையின் தமிழீழ விரோதச் செயல்களைக் கண்டிப்பதும், அதற்காக தனிப்பட்ட முறையில் அவர் தமிழ் மக்களிடம்
மன்னிப்புக் கேட்பதுவும்கூட நியாயப்படுத்தக்
கூடியதேயாகும், இதையும் செய்தால்தான்
அவர் உண்மையாகவே மனிதநேய ஞானாதேயம் பெற்றார் என
எதிர்பார்க்கலாம்.
இந்தோசீன
நாடுகளுக்கு எதிரான போரில்(வியட்நாம், கம்பூச்சியா, லாவோஸ்) அமெரிக்காவின் கௌரவம்
உலக மக்களின் முன்னால் துகிலுரியப் பட்டதுபோல், தமிழீழத்துக்கு எதிரான போரில்
இந்தியாவின் கௌரவத்தை உலக மக்களின் முன்னால் துகிலுரிய வைத்ததற்காக இந்திய
மக்களிடம் இரஜீவ் காந்திக்காக மன்னிப்புக்
கேட்கவேண்டும். செய்வாரா? அவர் பெற்ற ஞானோதயம் செய்யவைக்குமா?
பிரதமப் பரம்பரையின் நாலாவது வாரிசு என உறுதிப்படுத்தப்பட்டவர் இவ்விதம் நடந்துகொள்ளமாட்டார். அவரின் ஞானோதேய
வார்த்தைகள் ஒரு சந்தர்ப்பவாத அரசியல் உத்தியேயாகும். இவ் உத்தி இந்திய
உள்ளுர அரசியலுடன் சம்பந்தப்பட்டதா? அல்லது உள்ளூர் அரசியலும், அனைத்துலக்
அரசியலும் சந்திக்கும் இடங்களுடன் தொடர்புபட்டதா என்பது ஆராயப்படவேண்டும்.
உள்ளுர் நலன் என்பதென்ன என்பது புரிகிறது. வரப்போகும் தேர்தலில் தமிழ் வாக்காளர்களைக் கவர்வதற்கானதோர் மசாலா என்று இதைக்
கருதலாம்.
ஆனால் அனைத்துலக நலன் என்ன
வென்று புரியவில்லை. ஆசியப் பிராந்தியத்தில் இந்து-பௌத்த மதப் பேரகங்காரவாத பாசிஸத்தை
உருவாக்குவதற்கு எதிரான முயற்சியாகவும், தெற்காசிய, தென்கிழக்காசிய மண்டலத்தில் சீனச் செல்வாக்கை வளர்ப்பதற்கானதோர் உத்தியாக இதைக்
கருதலாமா என்றும் கருதத்தோன்றுகிறது.
இது
தொடர்பான ஒரு முகவுரையை மாத்திரம் முன்வைக்கின்றேன். விவாதிப்போம்.
இந்தியாவின்
புவிசார் அரசியல் எவ்விதம் அமையவேண்டும் என்பது தொடர்பாக இந்திய ஆளும் வர்க்கம்,
மூன்று அரசியல் முனைகளாகப் பிரிந்து காணப்படுகின்றது.
முதலாவதுமுனை:-
இந்தியா, தனித்த(சுயாதீனமான) வல்லரசாக இருக்கவேண்டும் என்பது. மன்மோகன்சிங்கிற்கு முன்னைய காங்கிரஸ் இந்த நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. ரஜீவ் மரணத்திற்கு
பின்னைய காங்கிரஸ் நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளது. அமெரிக்க முகாம் நோக்கி இழுத்துச்
செல்ல மன்மோகன்சிங் எடுத்த முயற்சியிலும் வெற்றிகாணவில்லை. ரஜீவ் கொல்லப்பட்டும்
கூட மன்மோகன்சிங்கால் வெற்றிபெற முடியவில்லை. அப்பனைப் போன்று ஒரு கோட்பாடு நிலையில்
இருந்தல்லாமல், ராகுல் ஒரு சந்தர்ப்பவாத அரசியல் நிலையில் இருந்து கொண்டு, காங்கிரஸை
மீண்டும் இம்முனைக்குள் இழுத்துவிட அல்லது இழுபட்டுள்ளதுபோன்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்க
முற்படுகிறார்போல் தெரிகிறது.
உள்ளூர் நிலைமைகளின் காரணத்தால் தற்போது சங்பரிவாரங்களும் இதயசுத்தியுடன்
இந் நிலையை நோக்கியே நகர்கிறது போல்த் தெரிகிறது.
இரண்டாவதுமுனை:- அமெரிக்க வலயத்தில், அமெரிக்காவின் இளநிலை பங்காளியான வல்லரசாக
இருக்கவேண்டும் என்பது. பி.ஜே.பியின் மோடியணி இதில் மிகச் சுறுசுறுப்பான, சுய
முயற்சியுள்ள அரசியல் தலைமையணியாகத் திகழ்கிறது.
மூன்றாவதுமுனை:- அமெரிக்காவுடன் பகைத்துக் கொள்ளாமலும், சுயாதீனத் தன்மையை ஒரு விலங்காக்கிக்
கொள்ளாமலும்(அவர்களின் பார்வையில்), பிறிக்ஸ்(BRICs) கூட்டின் சுறுசுறுப்பான(Active Partner) பங்காளிகளின் முனை. இவ் அணியின் தோற்றம், ஒரு தனியான அரசியல்
அணிதிரளல் என்ற முறையில் இன்னமும் அரசியல் முழுமைபெறவில்லை. ஆனால், இந்தியா இவ்வணியைத்
தோற்றுவிப்பதற்கான கற்பம்தரித்துவிட்டது. பிரசவத்தின் அடையாளங்கள் தென்படத்தொடங்கிவிட்டன.
இன்றைய அனைத்துக் கட்சிகளும் இவ் அடையாளங்களைக் காட்டிநிற்கின்றன. ஆனால், இன்றுள்ள
எந்தவொரு கட்சியும் மூன்றாவதுஅணிக்குரிய குணசத்தைக் கொண்ட கட்சியாக அப்படியே பரிமணித்துவிடாது.
மீழ் அரசியல் சேர்க்கையொன்று ஏற்படும்(re-shuffling). காங்கிரஸ், பி.ஜே.பி ஆகிய கட்சிகளுக்கு மாற்றான கட்சியொன்று தோன்றக் கூடும். வரப்போகும்
தேர்தல் மூன்றாம் அணிக்கான பிரசவக்களமாக இருக்கலாம் என எதிர்பார்க்க முடியாது. பணநாயகமும், இன, மத நாயகமுமே
தேர்தலில் பிரதான பாத்திரம் வகிக்கப்போவதால் தேர்தல் அதற்கானதோர் உந்துவிசையாக அமையாது.
சீனாவுடன், அல்லது பாக்கிஸ்தானுடனான முறுகல்நிலை இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்கும்
அளவுக்கான ஒரு முறுகல் நிலையாக முதிரும்போதே
மூன்றாவது அணிக்கான பிரசவக்களம் உருவாகும்.
எதிர்பார்ப்புளை மட்டுமே இங்கு முன்வைக்கின்றேன். கால சூழநிலை
பொருந்தி வந்தால், ஆயுவுக் கட்டுரையாக வரக்கூடும் என எதிர்பார்க்கிறேன். விவ்வதத்தைத்
தொடர்வோம்.
21/3/18 புதன்.
No comments:
Post a Comment