Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Tuesday 11 August 2015


மதுவின் கோரத்தாண்டவத்திற்குத் துணைநிற்கும் காரணிகள்
மது ஒழிக!, மதுவை ஒழிப்போம், பூரண மதுவிலக்கு எனக் கூட்டத்தோடு கூட்டமாக நின்று முழங்குவதற்குப் பதிலாக, மதுவின் கோரத்தாண்டவம் பற்றி பேச முற்படுவது ஏன்? பூரண மது ஒழிப்பின் ஓங்காரத்தை பலவீனப்படுத்தத் தானே? அதன் வீரியத்தைக் குறைப்பதற்காகத்தானே? மது ஒழிப்பாளர்களிடையே குளப்பத்தை உருவாக்குவதற்காகத்தானே? எனப் பல கேள்விகள் எழுவது இயல்பு. ஆம், அப்படித்தான் என்று எடுத்துக் கொண்டால் அதில் ஒன்றும் தப்பில்லை.

ஏனெனில், மது ஒழிப்பு என்பது வெறுமனே ஒரு திட்டமல்ல; அது ஒரு தொடர் சமூக-நிழ்வுப்போக்காகும் (Social-phenomenon). ஆனால், டாஸ்மார்க் கடைகளை மூடல்/சீர்திருத்தல்/ஒழுங்குமுறைப்படுத்தல்/அமைவிடங்களை நெறிப்படுத்தல் ஆகியன சமூக-நிழ்வுப்போக்குகளல்ல, மாறாக அவை வெறுமனே வேலைத்திட்டங்கள் மாத்திரமேயாகும். நிச்சயமாக இவை எளிமையான வேலைத்திட்டங்களல்ல பல தடைகளைக் கொண்ட சிக்கலான(complicated but not complex) வேலைத்திட்டங்களாகும். இருந்தும் இவை நடைமுறைப்படுத்த முடியாத திட்டங்களல்ல.

அரசும், அரசாங்கமும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், மக்களும் உறுதியாக இருந்தால் இவற்றை நடைமுறைப்படுத்துவது தென்பது முடியாத காரியமல்ல. மிக எழிமையான திட்டங்களான, மணல் அள்ளுவதை நெறிப்படுத்தல், ஏழைகளுக்கான பங்கீட்டுப் பொருட்கள் கள்ளச்சந்தைக்கு செலவதைத் தடுத்தல், மோட்டார் சயிக்கிள் தலைக்கவசம் அணிதல் ஆகியவற்றையே நிறைவேற்றுவதில் தள்ளாடும் தமிழகம், டாஸ்மாக்கை நெறிமுறைப்படுத்தும் திட்டத்தை முறையாக நிறைவேற்றுமா என்பது சந்தேகந்தான். நம்புவோம், அதற்காகப் போராடுவோம்.

ஆனால், மது ஒழிப்பு அல்லது பூரண மதுவிலக்கு என்பதோ ஒரு சமூக-நிகழ்வுப்போக்கேயாகும், அதுவும் இது ஒரு எழிமையான சமூக நிகழ்வுப்போக்கல்ல (simple Social-phenomenon).மாறாக அது அதிக தொகுப்புத்தன்மை மிகு சமூகநிகழ்வுப் போக்காகும் (Much more complex Social-phenomenon). அது மட்டுமல்ல இது தனித்த ஒரு தொகுப்புத்தன்மை மிகு சமூகநிகழ்வுப் போக்கல்ல, பல தொகுப்புத்தன்மை மிகு சமூகநிகழ்வுப் போக்குகளின் கூட்டுச்சேர்க்கையாகும்(compound).
திட்டத்திற்கும் சமூக தொகுப்புத்தன்மை மிகு சமூகநிகழ்வுப் போக்குக்கும் இடையேயான வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதற்கான ஒரு எடுத்துக்காட்டு; சுதந்திரப்போராட்டத்தின் போது நடைபெற்ற “உப்பு அள்ளுதல்”,“கதர் ஆடைகள் தரித்தல்”, அந்நிய ஆடைகளைக் கொளுத்துதல் ஆகியனவை வேலைத்திட்டங்களாகும். இவை எழிமையானவையல்ல(simple). பல தடைகளைக் கொண்ட சிக்கலான(complicated but not complex) வேலைத்திட்டங்களாகும். ஆனால், சுதந்திரப் போராட்டம் அவ்விதமானதல்ல. அது தொகுப்புத்தன்மை மிகு சமூகநிகழ்வுப் போக்காகும். திட்டங்களைப் பற்றிய புரிதல்களை மட்டும் வைத்துக்கொண்டு காந்தி, நேரு, சவாக்கர், அம்பேத்கர், ஜின்னா, சுபாஷ் சந்திரபோஷ், பகவத் சிங், இடதுசாரிகள் ஆகிய வெவ்வேறு முனைகளைப்பற்றியும் அம்முனைகளுக்கிடையேயான தொடர்புகளைப் பற்றியும் புரிந்துகொள்ளமுடியாது. சுதந்திரப் போராட்டம் எனும் தொகுப்புத்தன்மை மிகு சமூகநிகழ்வுப் போக்கைப் புரிந்து கொண்டால்தான் இவை முடியும்.

மது உற்பத்தியையும் விநியோகத்தையும் மேலும் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு வேண்டுமென்றே, தெரிந்தே மதுஒழிப்பு, பூரண மதுஒழிப்புப் பற்றிப் பேசுபவர்களை வஞ்சகர்கள் என்று அழைக்காமல் வேறு எவ்விதம் அழைப்பது. இவ் வஞ்கர்கள் பல அணிகளாகப் பிரிந்துள்ளார்கள். ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு வேலைத்திட்டம் உண்டு. அவை ஒன்றுடன் ஒன்று ஒத்துவராதவையாகவும் இருக்கலாம், அல்லது அத்திட்டங்கள் மூலம் கிடைக்கும் பண லாபத்தையும் பிற சமூக இலாபங்களையும், எனைய அணிகளுடன் பங்கிட்டுக் கொள்வதை இவர்கள் விரும்பாமலும் இருக்கலாம். குறைந்தது டாஸ்மாக்கை கண்டிப்பதில் கூட பேரளவுக்குக்கூட ஒன்றாகச் சேரமுடியாதுள்ளார்கள். இவர்களுடன் இணைந்து கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து மதுஒழிப்புக் கோஷமிட சமூக நேயமுள்ள எவனும் சம்மதிக்கமாட்டான். நானும் அது போல்தான்.

அடுத்த பக்கத்தில், மது ஒழிப்பை நேர்மையாகவும் , உண்மையாகவும் விரும்பி டாஸ்மார்க கடைஅடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மற்றோர் தனி அணியாகத் திரண்டு வருகிறார்கள். இவர்கள் போலிகளும் அல்ல, வஞ்சகர்களும் அல்ல. இவர்கள் சமூகத்தை உண்மையாக நேசிப்பாளர்களாகும். ஆனால், டாஸ்மாக கடையகற்றல் எனும் திட்டத்தின் வெற்றி மது ஒழிப்பு எனும் தொகுப்புத்தன்மை மிகு சமூகநிகழ்வுப் போக்கின் வெற்றியாக மாறும் என இவர்கள் நம்புவது ஒரு வெற்றுக் கற்பனையேயாகும். இயல்பான கோபமும், அதை அடியொற்றி எழும் இயல்பான எழுச்சிகளும் நிலவும் சமநிலையைக் குலைக்க உதவக்கூடும், ஆனால் கீழ்வரும் நிபந்தனை நிறைவேறாவிட்டால், இவ் எழுச்சிகள் புதிய சமநிலையை உருவாக்க உதவமாட்டாது. அழிவு சாத்தியமாகலாம் ஆனால் ஆக்கம் சாத்தியமல்ல. தொகுப்புத்தன்மை மிகு சமூகநிகழ்வுப் போக்குகளை உருவாக்கவும் அழிக்கவும் வல்லமை மிக்க சமூக-அரசியல் அமைப்புகள் உருவாகவேண்டும் என்பதே அவ் நிபந்தனையாகும். இது உடனடி சாத்தியமில்லை தொடர் எழுச்சிகளினூடாகவே இது சாத்தியமாகும்.
ஆகவே மது ஒழிப்பு எனும் தொகுப்புத்தன்மை மிகு சமூகநிகழ்வுப் போக்கை வெற்றி கொள்வதற்கான வேலைத்திட்டங்களை வகுத்துக் கொள்ளவேண்டும். டாஸ்மாக் கடை எதிர்ப்பு அதற்கான வேலைத்திட்டங்களில் ஒன்றாகும். ஆனால் அது மட்டும் போதாது. இத்திட்டம் மது விநியோகத்தை நெறிப்படுத்துவதில் மட்டும் முடியக்கூடிய வாய்ப்புகளே அதிகமாக உண்டு. வேறு திட்டங்களும் வேண்டும்.

அதற்கு முன்னர் மது பற்றிய மனிதர்களின் புரிதல் என்னவாக இருக்கவேண்டும் என்பதை நோக்குவோம். மது எமக்குப் புறத்தேயிருந்து வந்த ஒரு இயற்கை அனர்த்தமல்ல. அது நாம் எமக்காக உருவாக்கிக் கொண்டது. சுமார் 5000வருடங்களுக்கு முன்னரே நாம் அதை உருவாக்கிவிட்டோம். 5000வருடங்களாக நாம் அதைப் பயன்படுத்தியும் வருகிறோம். சிற்சில சந்தர்ப்பங்களில் நாம் அதை தவறுதலாக பயன்படுத்தியும் உள்ளோம். சிற்சில சந்தர்ப்பங்களில் மாத்திரந்தான் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பார்ப்பனியம் இந்திய சமூகத்தை தனது ஆதிக்கத்துக்கு கொணர்வதற்க்கு முற்பட்ட காலத்தில் இத் தவறு நடந்துள்ளது. ஆனால் இந்திய சமூகம் அத்தவறுகளைத் திருத்திக் கொண்டது, மதுவுக்கு அடிமையாகும் நிலையில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டது. மனிதர்கள் மீண்டும் மதுவை தமது நண்பர்களாகிக் கொண்டார்கள். இதற்காக இந்திய மக்கள், பௌத்த, ஜைன சமயங்களுக்கு காலாதி காலமும் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்களாகும். மதுவை மனிதர்கள் தமது கட்டுப்பாட்டிற்க்குள் கொணர்ந்து அதைத் தமது நண்பனாக்கிக் கொண்டதனால் பௌத்த இந்திய மிகபெரும் வளர் திசைப் பண்பாட்டையும், பாரிய அறிவியல் தத்துவங்களையும் படைத்தது. பௌத்தம் வீழ்ந்து முழு நிறைவான பார்ப்பனிய இந்தியா அமைந்தது. சதுர் வர்ண சாதியம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் கடைசிப் படிகளில் குடியிருத்தப்பட்ட கீழ்க்குடி இந்தியர் மதுவுக்கு அடிமையாக்கப் பட்டார்கள். மேட்டுக்குடி இந்தியா இது விடயத்தில் கணக்காக நடந்து கொண்டது. அதைத் தொடர்ந்து வந்த இஸ்லாமிய இந்தியா கீழ்க்குடியை மதுவின் அடிமைத்தனத்தில் இருந்து மீட்டது. மது மீழவும் கட்டுப்பாட்டுக்குள் வந்த்தது. இதனால் இந்தியாவின் சதுர்வர்ண சாதியக் கட்டுமானத்தில் பாரிய வளர்திசை மாற்றங்கள் ஏற்பட்டன. அதற்கடுத்ததாக வந்த பிரித்தானிய இந்தியா மதுவில் மனிதர்களை மூழ்கி எடுத்தது. மனிதன் மதுவுக்கு அடிமையானான். மதுப்பழக்கம் மதிப்பூட்டப் பட்டது, அது உயர்ந்தோர் நாகரிகமாக அறிமுகமானது. மனிதர்கள் மதுவுக்கு அடிமையானார்கள். அதை நாகரிகமாகவும் கருதினார்கள். சுதந்திர இந்தியாவில் மனிதர்கள் மதுவிலிருந்து மீட்கப்பட்டார்கள். மீண்டும் மது மனிதர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொணரப்பட்டது. இன்று நாம் வாழும் இந்தியா காப்ரேட் இந்தியாவாகும். இவ்விந்தியா மனிதர்களை மதுவுக்கு அடைமைப்படுத்துவதில் மிகவும் வினைத்திறனுடன் செயல்பட்டுவருகின்றது. எந்த மனிதர்கள் காப்ரேட் இந்தியாவின் சமூக சமநிலையைக் குலைக்கக் கூடியவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் மதுவால் அவன் வழைத்துப் போடப்படுகிறான். பார்ப்பனிய இந்தியாவின் அனுபவங்கள் மதிப்பூட்டப்பட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்விதம் வழைத்துப் போடுவதற்கான வலையின் தமிழ்நாட்டு வடிவங்களில் ஒன்றுதான் டாஸ்மார்க் கடை வலைப்பின்னலாகும். வேறும் வடிவங்கள் தமிழ் நாட்டில் உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 
இதனால்தான் மதுவின் கோரத்தாண்டவத்திற்குத் துணைநிற்கும் காரணிகள் என்ற தலைப்பைத் தெர்ந்தெடுத்தென்.

தொடரும

No comments: