Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Wednesday 19 August 2015

Arinesaratnam.Gowrikanthan



மதுவின் கோரத்தாண்டவத்திற்குத் துணைநிற்கும் காரணிகள் தொடர்-2
பூரண மதுஒழிப்பும், அரசியல் கட்சிகளின் கபட நாடகங்களும்.
பிரதான இரு இந்தியளவிலான முதலாளித்துவ தேசியக் கட்சிகளும் பூரணமது ஒழிப்பு சாத்தியமில்லை என்பதை மக்களுக்கு உணர்த்திவிட்டன. ஆனால் அவர்களின் மாநிலக் கிழைகளும், ஆளும் கட்சி தவிர்ந்த அனைத்து பிற மாநில முதலாளித்துவக் கட்சிகளும், எதிர்கட்சிகளாக இருக்கும் கிட்டத்தட்ட அனைத்து நடுத்தரவர்க்கக் கட்சிகளும் மதுஒழிப்புப் பற்றி அதிகம் முழங்கி வருகின்றன. கட்சிகளின் தலைவர்களுக்கும் அதன் நெருக்கமான தொண்டர்களுக்கும், கட்சிகளின் சிந்தனைப் பட்டறைகளுக்கும் தெரியும் இது நடமுறைச் சாத்தியம் அற்றதென்று. தாம் நன்றாக நடிக்கின்றோம் என்பதுவும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் நடித்தேயாக வேண்டும் என்பது அவசியமானதாய் உள்ளது. இந்த நடிப்பும், ஆவேசப் பாவனையும் வெறுமனே வாக்குத் தேடுவதற்கானதல்ல. நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதிகளாக உள்ள சின்னக் கட்சிகளின் குறிக்கோள் இவ்விதமானதாக இருக்கலாம், இதில் அவர்கள் சிற்சில வெற்றிகளைப் பெறவும் கூடும். ஆனால் பெரிய கட்சிகளின் குறிக்கோள் வெறுமனே வாக்குச்சீட்டுகள் அல்ல. மதுவின் அரக்கத்தனத்துக்கு எதிரான மக்களின் இயல்பான, கபடத்தனமற்ற கோபத்துடனும், மது பயன்பாட்டுக்கும் வினியோகத்துக்கும் எதிரான அவர்களது வேலைத் திட்டங்களுடனும் ஒத்தோடுவதுபோல் பாசாங்கு பண்ணி இவற்றிற்கு எதிரான மக்களின் போராட்டங்களை நீத்துப் போகச்செவது, முடியாத பட்சத்தில் அவற்றை திசைதிருப்புவது ஆகியவைதான் இவர்களின் குறிக்கோளாகும்.

ஏனெனில், பூரண மதுவிலக்கு, மதுவிலக்கு, அரைகுறை மது ஒழிப்பு, படிப்படியான மது ஒழிப்பு ஆகிய இவற்றில் எதையுமே சாத்தியமற்றதாக்குவதற்கான காரணிகளில் இக்கட்சிகளும் ஒன்றாகும். நீண்டு நின்று பிடித்துச் செயல்படும் காரணி இவ் அரசியல் கட்சிகளல்ல. இதற்கான வேறோர் அடிப்படைக் காரணியுண்டு. அவ் அடிப்படைக்காரணி இவர்களின் விருப்புவெறுப்புக்கு அப்பாற்பட்டதாகும். இவர்கள் நிஜமாகவே மது ஒழிப்பை விரும்பினாலுங்கூட அது சாத்தியமில்லை. சந்தையில் போதைப் பொருட்களுக்கான தேவை இல்லாது போகும்வரை போதைப் பொருட்களும் இருக்கும். தேவைபெருகப்பெருக போதைப்பொருடகளின் உற்பத்தி விற்பனவு ஆகியனவும் பெருகும். தேவைதான் கண்டுபிடிப்புகளின் தந்தை என்பது போதைப் பொருட்களுக்கும் பொருந்தும்.(necessity is the mother of invention). இக்கூற்றுக்கு ஆதரவாக மூன்று முக்கிய எடுத்துக் காட்டுகளை பார்ப்போம்.

முதலாவது:- சீனக் கம்யூனிட் கட்சி போதைப் பொருட் பாவனையைத் தடுப்பதில் முழு மனதுடன் மிகக் கண்டிப்பாகவே நடந்து கொள்கிறது. அந்நாட்டில் போதைப்பொருள் உற்பத்தியும் விநியோகமும் தடைசெய்யப்பட்டுள்ளன. இருந்தும் இன்று சீனாவில் போதைப்பொருள் பயன்பாடு மிகத்துரிதமாக வளரத்தொடங்கியுள்ளது. ------------- நடந்த அபினி யுத்தத்தை சீனர்கள் மூண்டும் நினைவுகூறத் தொடங்கியுள்ளனர். சீனாவில் மீண்டும் ஒரு அபினியுத்தம் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. போதைப்பொருள் தேவைக்கான ஒரு சந்தையாக சீனா மாறியது எவ்விதம்? அதற்குத் துணைபுரிந்த அக, புறக் காரணிகள் என்ன?

எடுத்துக்காட்டு 2:-சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிஸக் கொள்கையை கைவிடுவதற்காக நடத்திய ----------- திறந்த கொள்கை இயக்கத்தின் போது வொட்கா(ருஷ்ய மது) பயன்பாட்டை அதிகரிப்போம் எனக் கூறவில்லை. டாஸ்மார்க் கடைகள் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், சோவியத் யூனியன் சிதைய முன்னரேயே ருஷ்யர்கள் வொட்காவிற்கு அடிமையாகிவிட்டார்கள். உலகின் முன்னணிக் குடிகார நாடுகளில் ருஷ்யாவும் ஒன்றாகி இருந்தது.

எடுத்துக்காட்டு 3:- ஐக்கிய அமெரிக்க குடியரசில் மதுபானத்துக்கு எந்தத் தடையும் இல்லை. போதை ஏற்படுத்தும் தன்மை மது பானத்துக்கும் உண்டு. ஆனால் அப்போதையால் திருப்திப்படாத அமெரிக்கமக்கள் நவீன போதைப்பொருட்களுக்கான மிகப்பெரும் சந்தையாக மாறினார்கள். ஆனால்

அமெரிக்க அரசு போதைப்பொருள் உற்பத்தியையும் விநியோகத்தையும் தடைசெய்தே உள்ளது. துப்பாக்கியைக் கூடத் தடைசெய்யாத அமெரிக்க அரசு போதிபொருளை தடைசெய்துள்ளது. அயல் நாடுகளில் இருந்தே போதைப்பொருட்கள் அமெரிக்காவுக்குக் கடத்தப்படுகின்றன. ஆனால் எந்த அயல் நாடும் தமது நாடுகளில் போதைப்பொருள் உற்பத்திக்கும் விநியோகத்துக்கும் எந்த சட்ட அங்கிகாரமும் வளங்கவில்லை. அமெரிக்காவும், அதன அயல்நாடுகளும் சேர்ந்து நடவடிக்கை எடுத்தும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கமுடியவில்லை. போதைப்பொருள் கடத்தல் காரர்கள் நாடற்ற ஒரு அரசாகவே செயல் படுகிறார்கள். நவீன கருவிகளைக் கொண்ட தரைப்படயும் கடற்படையும் அவர்களிடம் உண்டு. போதைப் பொருள் உற்பத்தியிலும் விற்பனவிலும் கிடைக்கும் இலாபம் கொட்டிக் குவிகிறது.

மது உட்பட போதைப் பொருள் பாவனைக்கான நீடித்து நின்றுபிடித்திச் செயல்படும் அடிப்படைக் காரணி அந்நாட்டின் அரசியல் கட்சிகளல்ல. இக்காரணி கட்சிகளின் விருப்புவெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. சந்தைத் தேவையை உருவாக்குவது இவர்களல்ல. அவ்விதமானால் அது எது என்பது பற்றிய கருத்தைக் கூறுவது இக்கட்டுரையின் இவ்விடக் குறிக்கோளல்ல. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மது ஒழிப்பைச் சாத்திய மற்றதாக்கும், அதாவது மதுவுக்கான சந்தயைப் பேணிப்பாதுகாக்கும் காரணிகளில் அரசியல் கட்சிகளும் அடங்குவர் என்பதை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் குறிக்கோளாகும். தொடரும். 19/08/2015

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.