Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Friday, 21 December 2018

அரசியல் கட்சிகளும்-போக்கிரிகளும்


      மிகச் சரியாகச் சொன்னீர்கள். அரசியல் பிற்போக்குகளையிட்டு உங்களின் விமர்சனங்களில் உள்ள கட்டுக்கடங்கா கோபத்தினதும் வெறுப்பினதும் காரணம் இப்போது புரிகிறது. நிற்க..

அரசியல் கட்சிகளும்-போக்கிரிகளும்

அரசியல் கட்சிகள் என்பதெவை? ஒரு வர்க்கத்தின் அல்லது வர்க்கத்தட்டின் பிரதிநிதி; இது அனைவரும் அறிந்ததே.  ஆனால், பாரளுமன்ற அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களில் ஏகப்பெரும்பான்மையோர் இவ்வர்க்கங்களைச் சேர்ந்தவர்களல்ல. (இடதுசாரிக் கட்சிகளும், தலித் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கு). இவ்வர்க்கங்களைச் சேர்ந்தவர்களில் அனேகமாக எவருமே அரசியல் கட்சிகளுக்குள் வரமாட்டார்கள். இதன் அர்த்தம், இவர்கள் வோட்டுப் பொறுக்கிக் கட்சி அரசியலுக்கு வரமாட்டார்கள் என்பதில்லை; மிகப் பெரும்பான்மையான வோட்டுப் பொறுக்கிக் கட்சிகளை இயக்குவதே இவர்கள்தான். ஆனாலும் அரசியல் கட்சிகளுக்குள் வரமாட்டார்கள். அக்கட்சிகளை வெளியில் இருந்து இயக்குவார்கள். சாதாரண கண்களுக்குத் தெரியாத முறையில் இது நடைபெறும். இதற்கான நுட்பமான வலைப்பின்னல்களைக் கொண்டுள்ளார்கள்.

அவ்விதமானால், இக் கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் யார்? நடுத்தர வர்க்கத்தினரும், உதிரி முதலாளி வர்க்கத்தினருந்தான்.                               உதிரி முதலாளிகள் என யாரைக் குறிப்பிடுவது? இதோ அவர்கள் “கூலிப்படையோடு தொடர்பு வைத்துள்ளவர்கள், மணல் கொள்ளை மாபியாக்கள், கொலை வழக்கில் தொடர்பு உடையவர்கள், கள்ள சாராயம் காய்ச்சியவர்கள், திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள், ஆணவக்கொலைக்கு ஆள் தயார் செய்கிறவர்கள், நில அபகரிப்பு செய்கிறவர்கள், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் ” மேலும், போலி நிதி நிறுவன நடத்துனர்கள், பதுக்கல் முதலாளிகள், ஹவாலா பணமோசடிக்காரர்கள், பெண் உடல்களுக்கு மாமா வேலைபார்ப்பவர்கள், போதைபொருள் விற்பனையாளர்கள், கள்ளச்சாராயக் காட்சிகள், ஆள்கடத்தல் காரர்கள், கட்டபஞ்யாத்துக் காரர்கள், வர்த்தக புறோக்கர்கள் போன்றவர்களே உதிரிமுதலாளிகளாகும்.

           இது மிக நீண்ட பட்டியலாகும். கட்சியில் இணையும் நடுத்தர 
வர்க்கத் தினரைக்கூட காலப்போக்கில் இந்த நிலைக்கு உள்ளாகி விடுவார்கள்.

பொருள் ஈட்டுவதற்காக முதலாளித்துவ நியமங்களையும், அறங்களையும் உதாசீனப்படுத்திச் செயற்படுபவர்களே உதிரி முதலாளிகள் என அழைக்கப்படுகிறார்கள். இதற்காக இக்கட்சிகள் உதிரிமுதலாளித்துவக் கட்சிகள் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. இவை முதலாளித்துவ கட்சிகள்தான்.  
         ஆனால், அதன் செயற்பாட்டாளர்களில் பெரும்பான்மையினர் உதிரி முதலாளிகளாக உள்ளனர்.



No comments: