Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Saturday, 22 December 2018

தகவமைப்பில்* முன்னேறிவரும் சிறிலங்கா இராணுவமும் தக்கவைப்பில்* தடுமாறிவரும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணியும்.


தகவமைப்பில்* முன்னேறிவரும் சிறிலங்கா இராணுவமும், தக்கவைப்பில்* தடுமாறிவரும் 

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணியும்.


       இலங்கையில் நடைபெற்றுவரும் அரசியல் நெருக்கடி இன்றுநேற்று ஏற்பட்ட தல்ல. அதிகாரம் மிக்க ஜனாதிபதியும், அதிகாரம் குன்றிய பாராளுமன்றமும் என்ற ஆட்சியமைப்பு முறைமையின் அறிமுகத்துடன் ஏற்பட்டதாகும். இம் முறைமயின்படி இரு அதிகாரங்களும் மக்களால் தனித்தனியாகத் தெரிவுசெய்யப்பட வேண்டி யவை யாகும். இவ்விதமே இதுவரையும் நடந்து வருகின் றது. ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் மிக்கவர். இராணுவமும் தேசிய பாதுகாப்பும் ஜனாதிபதியின் அதிகாரத் துக்குட்பட்டவை. இதில் பாராளுமன்றம் தலையிட முடியாது, ஏனைய விவகாரங்களில் பாராளு மன்றம் சுயமாக முடிவெடுத்துக் கொள்ளலாம். ஆனால்,
        அம் முடிவுகளை மாற்றும் உரிமையும், நிராகரிக்கும் உரிமையும் ஜனாதிபதிக்கு உண்டு. அதாவது ஜனாதிபதியின் அனுமதியிருக்க வேண்டியது கட்டாயம். அதுபோல் நாட்டிற்கான பிரதம மந்திரியையும், பிற மந்திரிகளையும் தேர்ந்தெடுக்கும் உரிமை பாராளுமன்றத்திற்கு உண்டு. இதுவும் பாராளுமன்றத்தின் ஒட்டுமொத்த முடிவின் படி யானதல்ல, பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் (ஆழும் கட்சி) விருப்பத்திற்கு அமைவானது. இது தான் தெற்காசிய பாராளுமன்ற ஜனநாயக மரபாகும். ஆனால் இந்த முடிவும் ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இவர்கள் அவரின் நியமனமாகவே கருதப்படுவர். ஏற்றுக் கொள்ளப்படவில்லை யானால் நாட்டின் உண்மையான, முழுமையான அதிகார பீடத்திற்கும், (ஜனாதிபதி); அரைகுறை அதிகாரமிக்க (Semi-Powered) அல்லது கொத்தடிமைத்தன (bonded crap) அதிகார பீடத்துக்குமான (பாராளு மன்றம்) ஒத்துப்போகாத்தன்மை நாட்டின் அனைத்துச் செயற்பாடு களிலும் எதிரொலிக்கும், செயற்பாடுகளுக்கும் பங்கம் விழைவிக்கும்.
        மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ சர்வாதிகாரம் (ஜனநாயக இராணுவ சர்வாதிகாரம்), மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற ஜனநாயகத்தை மதித்து அதேநேரம் அதைத் தனது கொத்தடிமையாக்கி, அக் கொத்தடிமையுடன் இணைந்து செயற்படும் ஓர் ஆட்சி அதிகாரக் கட்டுமானம் உலகின் எந்த மூன்றாம் நாடுகளி லும் இல்லை. ஜனாதிபதி ஒரு கட்சியையும், பிரதமர் வெறோர் கட்சி யையும் சேர்ந்தவராவும் கூட இருக்கலாம். இது இலங்கைக்கு மட்டுமே பிரத்தியேகமானதோர் கட்டமைப்பாகும்.
            1950களில், ஆயுதப் எழுச்சிகளின் மூலமோ, சோஷலிஸ நாடுகளின் உதவியுடனோ, ஆட்சிக்குவந்த அரசுகள் அனைத்தும் இராணுவ அரசுகள்தான். ஆனால், அவ் இராணுவம் பாராளுமன்றத் துக்கு கட்டுப்பட்டது. பாராளுமன்றமே உயர்ந்த கட்சி பீடமாக இருந்த்து. எகிப்து, லிபியா, பாலஸ்தீனம், உகண்டா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இவ்விதமானவைகளே. சில நாடுகளோ வெளிப்படையான இராணுவ அதிகாரத்துவ கட்டமைப்பு நாடுகளாகும். பாராளுமன்றமே அங்கு இல்லை. பல ஆப்ரிக்க நாடுகளும் இவ்விதமானவையே.
    சோஷலிஸ நாடுகளின் நிலையோ வேறுபட்டது. இங்கு கம்யூனிஸ்ட் கட்சியே ஆளும் கட்சியாக இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரோ அல்லது தலைவரோ தான் இராணுவத்துக்கும் பொறுப்பாக இருப்பார்.
       பிரதம மந்திரி உட்பட அனைத்துப் பிரதான பதவிகளும் கட்சியின் பொறுப்பிலேயே இருக்கும். பாராளுமன்றம் ஒரு துணை யங்கம் மாத்திரமே. கட்சிதான் அந்நாடுகளின் ஒரே அரசியல் கட்சி யாகும். வேறுகட்சிகள் இல்லை. அந்நாடுகளின் பாராளுமன்ற மென்பது கட்சியின் நடவடிக்கைகளை மத்தியத்துவக் குறைப்புச் செய்வதற்கான (de-centralization) ஒரு அங்கமேயாகும்.
       மேலெழுந்தவாரியாக நோக்கும்போது இலங்கையினதும், சோஷலிஸ நாடுகளினதும் ஆட்சி அமைப்புக் கட்டுமானங்கள் ஒன்று போல்த் தோன்றலாம். ஆனால் முதலாளித்துவ நாடுகளின் அரசியல் கட்சிகளும், சோஷலிஸ நாடுகளின் அரசியல் கட்சிகளும் தமக்குள் எந்த ஒப்புவமையும் இல்லாத அமைப்புகளாகும். கம்யூனிஸ்ட் கட்சிகள் நாட்டின் பல்வேறு வெகுஜன அமைப்புகளின் நிறுவனமயமான (organized) தலைமையாகும். அதுபற்றிய விளக்கத்தை இங்கு தவிர்க்கப்படுகிறது.
        நாட்டுப்பற்றுத் (Patriotic) தன்மைமிக்க மஹாவம்ச தேசிய இனவாதக் (ethno-nationalistic) கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், நாட்டுப்பற்றுத் தன்மைமிக்க தீவிரவாத போலி இடது தேசிய இனவாதக் கட்சியான ஜனதா விமுக்திப் பெரமுனை யும், இராணுவத் தலைவரை ஆட்சித் தலைவராகக் கொண்ட நிறைவேற்று அதிகாரம் மிக்க இவ் ஆட்சிக் கட்டுமானத்தில் அடிப்படை மாற்றங்கள் செய்ய வேண்டுமென தொடர்ந்து சொல்லிவருகின்றன. ஆனால் இதைச் சீர்திருத்துவதற்கான உருப்படியான எந்த நடவடிக்கைகளும் இன்று வரை அவர்களால் மேற்கொள்ளப்படவில்லை. என்ன காரணம்? சி..சு கட்சியும், ஜே.வி.பியும், யு.என்.பி யும், பேரகங்காரவாதக் குட்டையில் ஊறிய மட்டைகளே.
        அடுத்த பக்கத்தில் இவ் ஆட்சிக் கட்டுமானத்தை ஒட்டி யு.என்.பி.-யின் நிலைப் பாடு என்ன? பிறப்பெடுத்த நாளில் இருந்து இன்றுவரை (ஆரம்பத்தில் இது D.S.செனநாயக்காவின் தலைமையில் இலங்கைத் தேசியக் காங்கிரஸாக இருந்தது) இக் கட்சியானது தொடர்ந்து ஐரோப்பிய, அமெரிக்க முகாம்களின் எடுபிடியாகவே செயற்பட்டு வருகிறது. நாட்டுப்பற்றுக்கு எதிரான குணாம்சங்கள் கொண்ட, தீவிர மஹாவம்ச இனவாத தேசிய கட்சியாகவே இருந்து வருகின்றது. அதன் கடந்த காலச் செயற்பாடுகளை பட்டியலிடுவோம்.
1) அனைத்து தேசிய இனங்களையும் உள்ளடக்கியிருந்த இலக்கைத் தேசியக் காங்கிரஸில் இருந்து முதலில் முஸ்லீம்களையும், பின்னர் மலையகத் தமிழர்களையும்  அடுத்ததாக இலங்கைத் தமிழர்களையும் வெளியேற்றியது,
2) மலையக தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்து, அம் மக்கள் மீது ஓர் அரசியல் இனப்படுகொலையை (உயிர் கொலையல்ல) நடத்தியது இவர்கள்தான். இதுதான் இலங்கையின் முதலாவது இனப்படுகொலை யாகும்.
3) சிங்கள, தமிழ் மொழிகளிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பண்டா-செல்லா ஒப்பந்தத்தை எதிர்த்து சிங்கள மக்களிடையே கிளர்ச்சிகளை நடத்தியதுவும் இவர்கள்தான்.
4) நாட்டுப்பற்றாளரும், தேசிய இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், யு.என்.பி-க்கெதிரான முற்போக்கு அரசியல் கூட்டணியை ஏற்படுத்த முற்பட்டவருமான S.W.R.D.பண்டாரநாயக்காவைக் கொன்றது.
5) நாட்டுப்பற்றுக் களத்தில் தனது எதிரியான J.V.P-ஐயும், அதே களத்தில் தமது மற்றோர் எதிரியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் ஒருவரோடு ஒருவர் மோதவிடுவதில் இரகசிய பின்புலமாக இருந்தது.
6) நாட்டுப்பற்றானரான J.V.P. தலைவர் றோஹான விஜயவீராவை இரகசியமாகக் கொன்றது.
7) நாட்டுப்பற்றாளரான சிறிமாவோ பண்டாராநாயக்காவின் குடியுரிமை யைப் பறித்தது.
8) ஜே.ஆர்.-ராஜீவ் ஒப்பந்தத்தை எதிர்த்தற்காக J.V.P. இயக்கத்திற்கு எதிராக பெருந்தாக்குதல் கொடுத்து பலரைக் கொன்று குவித்தது. இதற்காக சிறிலங்கா இராணுவத்தை தெற்கில் குவிப்பதற்காக புலிக ளுடன் ஓர் நட்பு உடன்படிக்கையும் செய்து கொள்ளப்பட்டது.
9) புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பகுதி தனியாகப் பிரிந்து போவதற் கான ராஜதந்திரச் சூழ்ச்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்தது தற்போதைய பிரதமர் றணில் விக்கிரம சிங்கதான் (U.N.P,).
10)  நாட்டுப்பற்றாளரும், தேசிய இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், யு.என்.பி-க்கு எதிராக, இடதுசாரிகளையும் உள்ளடக்கிய முற்போக்கு அரசியல் கூட்டணியை ஏற்படுத்த முற்பட்டவருமான S.W.R.D. பண்டார நாயக்காவை கொன்றது.

10) இராஜதந்திரம்:

 10.1) புத்துக்குள் பதுங்கியிருக்கும் எலிகளை (முதலாளித்துவ வாதிகளின் பார்வையில் பயங்கரவாதிகள்’) வெளிக் கொணர்வதற்காகபிசாசுகளுடனும் வாழப்பழக வேண்டும்என அடிக்கடி கூறிக்கொள் வதன் மூலம் ஆயுதப் போராளிகளின் விழிப்புணர்வை மங்கச்செய்தது.
   10.2) இராஜதந்திரத்தில் குள்ளநரி என்ற புகழுக்குரிய ஜே.ஆர்.ஜெயவர் த்தனாவால், இந்திய அரசையும்-விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் மோதவிடுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஜே.ஆர்-ராஜீவ் ஒப்பந்த மாகும். இவ் ஒப்பந்தத்தின் முன்னோடியாக இருந்தது ஜெ.ஆர். தான். ஏமாந்தது ராஜீவ்.
    10.3) ஜே.ஆரைத் தொடர்ந்து ஜனாதிபதியான பிரேமதாசபுலிகள் பசித்தாலும் புல்லையா தின்பதுஎனக் கூறி, புலிகளுக்கு ஆயுதமும், புல்லும் (உணவு), பாதுகாப்பும் வழங்கினார். இதன் மூலம் புலிகள்-இந்திய அமைதிப் படை முரண்பாட்டை கூர்மைப் படுத்தினார். I.P.K.F வெளியேறிய பின்னர் புலிகளை பாராளுமன்ற ஜனநாயகத்துள் (நிறை வேற்று அதிகாரமிக்க ஜனாதிபதிக் கட்டமைப்பு) இழுத்துவிட முற்பட் டார். ஆனால் வேறு காரணங்களால் அவ்வெற்றி நிலைபெற்று நிற்கவில்லை. தமிழீழத்தில் இராணுவ ஆட்சியை நிலவுவதே பிரபாகரனின் கொள்கையாக இருந்ததே பிரதான காரணமாகும்.
11) இவை அனைத்துக்கும் மகுடம் வைத்தாற்போல் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியும், கொத்தடிமையாய் மாற்றக்கூடிய நிலையில் உள்ள பாராளுமன்ற ஜனநாயகமும் இணைந்த அரசியல் யாப்பை கொணர்ந்ததுவும் U.N.P. தான்.
   இவர்களின்  நோக்கந்தானென்ன? இலங்கையின் இனகுழுமங்களின் குடிசனப்பரவலின் அடிப்படையில் நோக்கினால், இங்கு அனைத்து மொழிப்பிரிவினரதும் ஆதரவைப் பெற்றதொரு கட்சியினால் மட்டுந் தான் (தெசியக் கட்சி) இலங்கைப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்டதோர் கட்சியாக மாறமுடியும். அப்போதுதான் அக்கட்சியால் தனது விருப்படியான மந்திரிசபையை அமைக்க முடியும். ஆனால், சிங்கள மக்களின் ஆதரவை மட்டும் பெற்றதோர் கட்சியால், ஒருபோதும் தேசியக்கட்சியாக மாறமுடியாது. அதற்கான பெரும்  பான்மை வாக்குகள் கிடைக்காது. 1970களில் இருந்து இனவாதக் கட்சிகளின் இருத்தல்தான் இலங்கையின் அரசியலாக மாறிவிட்டது. சமூக  இனகுழுமங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுணர்வு ஏற்பட்டால் தவிர இந்த அரசியல் நிலை மாறாது.
        இதனால் மஹாவம்ச பேரகங்காரவாத ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், அதை முன்னெடுத்துச் செல்லவும் பாராளுமன்றம் பெரும் தடையாக மாறிவிட்டது என்பதை U.N.P-யும், J.R.ஜெயவர்த்தனா வும் மிகச்சரியாகப் புரிந்துகொண்டார்கள். இப் புரிதலின் அடிப்படையில் மிக அமைதியான முறையில் இராணுவ ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது.
இது மட்டும் காரணமல்ல, வேறோர் காரணமும் இருந்தது.
  இலங்கையில் தேச அரசு (Nation State) ஒன்று உருவாகும் நிலை தோன்ற உள்ளதை யு.என்.பி முன்கூட்டியே புரிந்து கொண்டுவிட்டது. தமிழரசுக் கட்சியினதும், அக்கட்சியால் முன்வைக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கான சுயாட்சி (Federalism) எனும் கோரிக்கையும் யு.என்.பி- பேரதிர்ச்சுக்கு உள்ளாக்கியது. குறிப்பிட்டதொரு பூகோளப்பரப்பில் முதலாளித்துவ உறவுகள் அரும்பும் நிலையில் வாழும் வெவ்வேறு பட்ட சமூகக் குழுமங்கள் ஒரு தேச அரசை (தேசிய அரசல்ல) (Nation State) உருவாக்கும் பயணத்திலான முதலாவது அடியெடுப்பு அவர்கள் உருவாக்கும் சமஸ்டிக் கூட்டமைப்பேயாகும். (Federalist unity).
        இக் கூட்டமைப்பில் உறுப்புரிமை வகிக்கும் சமூகக் குழுமங்கள் அனைத்தும் தாம் தனித்துவமாக வளர்வதை விருப்புபனவாகவும், அதற்கான வளங்கள் தம்மிடம் உள்ளன என்று நம்புபவனவாகும் இருக்கும். இவ் வளர்ச்சிக்கு அயல் சமூகக் குழுமங்களால் தடைகள் எதுவும் வரக்கூடாது எனவும் பொதுவான தடைகளைத் தாண்ட  தமக்கிடையேயான ஒற்றுமையை விரும்புவர். இந்த நிலையிலான ஒரு கூட்டமைப்பே சமஸ்டிக் கூட்டமைப்பாகும். இதுதான் தேச அரசு உருவாக்கத்தின் முதலாவது படிநிலையாகும். அமெரிக்கா, பிரித்தா னியா, கனடா, ஜெர்மன் ஆகியநாடுகள் இப்படிநிலை ஊடாக வே வளர்ந்துள்ளன. ஒவ்வொரு சமூகக் குழுமங்களும் யாரையும் சுரண்டாமல், யாராலும் சுரண்டப்படாமல் தம்மால் தனித்து நிற்க முடியும் என்ற நிலையை அடைவதே சமஸ்டிக் கூட்டமைப்பின் வடிவமாகும். அதாவது ஒரு தேசம் என்ற நிலைக்கு வளரக்கூடிய அவா உருவாகிவிட்டதென அர்த்தங்கொள்ளலாம்.
     இச் சமஸ்டிக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமது தேச நிலையை முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட கூட்டமைப்பே (Confederation) ஆகும். இதற்கும் அடுத்த கட்டமே தேச அரசாகும். இதுவே உயர்ந்த கட்ட வளர்ச்சியாகும். இதுதான் தேச அரச உருவாக்க விதியாகும்.
        இலங்கைத் தேச அரசை (Ceylon Nation State) உருவாக்குவதற்கான முதலாவது வடிவத்துடன், தமிழ் பேசும் மக்கள், தந்தை செல்வநாயகத் தின் தலைமையில் இலங்கை அரசியல் மேடைக்கு வந்துவிட்டார்கள்.
        இலங்கைத் தேச அரசு உருவாக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிவதற்காக முன்வைக்கப்பட்டதுதான் இந்த நிறைவேற்று அதிகாரத் துவ ஜனாதிபதி அரச வடிவாகும். 
       காலத்துக்குக் காலம் எழும் அரசியல், இராணுவ நெருக்கடிகளில் இருந்து தன்னை மீட்டெடுப்பதற்கும் வளர்த்தெடுப்பதற்கும் ஏற்ற தகவமைப்புகளைச் இராணுவம் செய்து வருகிறது.
        தற்போது இராணுவத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் என்ன?
1வது நெருக்கடி: தொல்லை கொடுக்கும் பாராளுமன்றம்:
ஐரோப்பிய, அமெரிக்க முகாம்களின் தலையீடுகளில் இருந்து சிறிலங்கா இராணுவம் தன்னை விடுவித்துக்கொள்வதேயாகும். இதன்மூலம் தனது இனத் தேசிய சுயாதீனத்தை ethno-national Indentity ஐப் பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறது.
        இவ் விடயத்தில் பாக்கிஸ்தான் இராணுவம் அடைந்துவரும் வெற்றி. அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்து துரிதமாக மீண்டுவரல்எதிர்கொண்டுள்ள நெருக்கடி; மியாமர் இராணுவத்தால் ஹோஹின்யா முஸ்லீம்களின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைத் தாக்குதலை முன்நிறுத்தி அவ் இராணுவத்தை உலக அரங்கினில் மனித உரிமை மீறல் குற்றவாளிகளாக நிறுத்த அமெரிக்காவும், .நா.சபையும் முயற்சிகள் எடுத்து வருகின்றன. சாத்தான்கள் வேதம் துகின்றன. இலங்கை இனப்படுகொலை விடயத்தில் வேதமோது வதைப் போல்.
    இவை சிறிலங்கா இராணுவத்திற்கு பல வளர்திசை, வளர்தடை படிப்பினைகளைக் கொடுத்துள்ள. இருந்தும் முழுமையான வெற்றிகளை இலங்கை இராணுவத்தால் பெறமுடியா நிலையே உள்ளது. ஆனாலும், இதற்கான தடைகளில் ஒன்றை அகற்றிவிட்டது. பாராளுமன்றம் முழுமையையும் சிங்கள பேரங்கார மயமாகிவிட்டது. அதுதான், பாராளுமன்றத்தில் தமிழ் இனத் தேசியவாத அணியின் எதிர்கட்சி அதிகாரம் பறிக்கப்பட்டதாகும்.
   இதன் மூலம் இராணுவம் தனது அடுத்தகட்ட வெற்றிக்காகத் தன்னை தகவமைத்துக் கொண்டுவிட்டது.
        ஆனால், புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், தக்கவைப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட அரசியல் முதுகெலும்பற்ற மிதவாத தமிழ் இனவாதத் தேசியர்கள் (ethno Tamil Nationalists) தமது தக்கவைப்பு நிலையை பேணமுடியாமல் மேலும் அல்லலுக்கு உள்ளாகி விட்டார்கள். ஐரோப்பிய, அமெரிக்க வல்லரசுகள், பாராளுமன்றத்துள் தம்மவரான றணில் விக்ரசிங்காவின் அதிகாரத்தைப் பாதுகாத்ததன் பின்னர், தமிழ் இனவாதத் தேசியர்களை கைகழுவி விட்டன. எதிர்கட்சி அந்தஸ்து ஓரளவு ஆழுமை மிக்கது, மந்திரி அந்தஸ்தோ, பொம்மைப் பாராளுமன்றத்துள் ர் கொலுப் பொம்மையே.
2வது நெருக்கடி: சுயாதீனமாகச் செயற்பட முற்படும் நீதித்துறை
நடந்து முடிந்த இவ் அரசியல் குளம்பத்தில் இலங்கை நீதித் துறை நிறைவேற்று அதிகாரத் துறைக்கு எதிராகச் செயற்பட்டுவிட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது. இவ்வித நிகழ்வுகள் சாதாரண மானவை. அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும், குறைவிருத்தி முதலாளித்துவ நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன. இந்திய நீதித் துறை அப்பப்போ மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், அதிகாரத் துவ கட்டுமானத்துக்கு (bureaucrat) எதிராகவும் நடந்து கொள்வதைக் காரணகூடியதாய் உள்ளது. அதேபோல் மிகச் சமீபத்தில் நீதித்துறை இரு சம்பவங்களில் அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக நடந்துள்ளதைக் காணலாம்.
முதலாளித்துவ அரசு கட்டுமானத்தின் தூண்களில் நீதித்துறையும், அதிகாரத்துவ நிர்வாகத்துறையும் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், அரசியல் நிர்வாகத்துக்கு மேலானது என்றும் ஓர் கருத்துப்படிவம் உருவாக்கப்பட்டுள்ளது. இக் கருத்துப் படிவத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக, முதலாளித்துவம் எவ்வளவோ சிரமப்பட்டு வருகிறது. ஆனால் ஊழலில் முன்னணி வகிக்கும் நாடுகளில் அதிகாரத்துவ நிர்வாகத்துறை அதிகாரிகள் ஊழல் எனும் சமூகச் சீர்கேட்டில் அமுங்கிப்போய் உள்ளார்கள். எந்தக் கட்சி வந்தாலும் அந்தக் கட்சியு டன் ஊழல் கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள். இதனால் அதிகாரத் துவ நிர்வாகத்துறையானது எந்த அறஒழுக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாதா திருடர்களின் குகையாக மாறிவிட்டது. இந்தியா, அதிலும் குறிப்பாக தமிழ்நாடு இதற்கான சிறந்த எடுத்துக் காட்டாகும்.
ஆனால் நீதித்துறை அவ்விதமல்ல, அது அரசியலுக்கு அப்பாற்பட்ட அறங்காவல்துறை என்ற சமூக மதிப்பு இன்னமும் நிலவுகிறது. முற்போக்கான மக்கள் போராட்டங்கள் வளர்ச்சியடையாத பகுதிகளில் இச் சமூக மதிப்பு நீடிக்கவே செய்கிறது. சமூக முரண்பாடுகள் மக்கள் போராட்டங்களாக வடிவெடுப்பதைத்தைத் தடுப்பதே நீதித் துறையின் பங்காகும். ஆகவே நீதித் துறைக்கும் பிற ஆட்சித் துறைகளுக்கும் ஏற்படும் முரண்பாடுகள் ஒரு மோதலாக மாறுவதைத் தடுப்பதில், அல்லது தவிர்ப்பதில் இவை இரண்டுமே மிக நிதானமாகவே நடந்து கொள்கின்றன. தற்போதைய ‘குளப்பதில்’  முதலில் காவல்துறை ஜனாதிபதி வசமானது. அடுத்ததாக சில அதிகாரிகளின் ‘சுதந்திரம்’ கட்டுப்படுத்தப்பட்டது, அடுத்ததாக ஊடகத்துறை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் கொணரப்படவுள்ளது. இதன் மூலம் நீதித்துறையின் அதிகாரத்தில் நேரடியாகக் கைவைக் காமலே சிறிலங்கா இராணுவம் தகவமைப்பிலான தனது முன்னேற் றத்தை சாத்தியப்படுத்துவதில் மேலும் முன்னேறிவருகிறது.
முடிவாக; யார் இந்த மிதவாதிகள்? மழைக்கால ஈசல்களைப் போல் பாராளுமன்றம் எனும் மின்விளக்கைச் சுற்றி மகிழ்வுடன் நடனமாடுகிறார்களே யார் இவர்கள்? களைத்துப்போய் சிறகுகள் களன்று பாராளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் துடிதுடித்துச் செத்துப் போவார்களா? இவர்கள் மழைக்கு முளைத்த காளான்களா? அல்லது தமிழ் சமூகத்தில் ஆளவேரூன்றி வளர்ந்திருக்கும் விஷ விரூட்சங் களா? வெட்ட வெட்ட தழைக்கிறார்களே, யார் இவர்கள்?
“மிதவாதம் – தமிழ் பேசும் மக்களின் தொடர் சாபக்கேடு” எனும் தலைப்பின் கீழ் நோக்குவோம். 
-------------------------------------------------------------------------------------------------------------
தகவமைப்பு - Adaptation
தக்கவைப்பு - existence



No comments: