சண்டையில்லாததால் மட்டும் சமாதானம் ஏற்படுமென்று என்னால் நினைக்க முடிய வில்லை. சமாதானம் பல கோடி மக்களின் வறுமை, சமூக புறக் கணிப்பு மற்றும் அடிமைத்தன சூழல்களில் மாற்றம் ஏற்படுத்தாது.
இந்த சமாதானம் செல்வம், வளங்கள், வாய்ப்புகள், அங்கீகாரம், இணைத்துக் கொள்ளல்
ஆகியவற்றை கணக்கில் எடுக்கவில்லை; வன்முறை, அதிகாரம் மற்றும் பொது வளங்களை தவறாக பயன்படுத்தல், லஞ்சம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் இயற்கையை அலட்சியம் செய்வதையும்
நிறுத்தப்போவதில்லை. தண்டனையிலிருந்து விலக்கு, ஆயுதக்கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் ஏழைகளிடமிருந்து செல்வத்தை அபகரிக்கும் ஆதிக்கம்
நிறைந்தவர்களையும் இந்த சமாதானம் ஒழிக்கப்போவதில்லை,..............................‘எந்த
மாறுபாடுமில்லாது அனைவரின் மனித உரிமைகளையும் மதிக்கும்
போதும், அவற்றை குழந்தைகளின் சுகாதாரம், கல்வி, தரமான குடும்ப கலாச்சாரம், வன்முறையற்ற குழந்தைப் பருவம் மற்றும் இளவயதினருக்கு தரமான வேலைக்கான
வாய்ப்புகள் உறுதிசெய்யப்படும் போது மட்டுமே சமாதானம் சாத்தியம்,.......அனைத்து
மனிதர்களும் நிறம், பாலினம்,மதம்,நாடு, பாலியல் வாழ்க்கைமுறை அல்லது பொருளாதார நிலை போன்ற பாகுபாடில்லாமல்
மதிப்பும் அங்கீகாரமும் பெறும் போது சமாதானம்
No comments:
Post a Comment