Featured post

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...

Friday 21 December 2018

உண்மையான பாசம் என்பதென்ன



'கடவுள்'மீது புனிதங்கள் கற்பிக்கப் படுவது போல,இந்த தாய்ப்பாசம் மீதும் பல புனிதங்கள் போர்த்தப்படுகின்றன.

சினிமாவில் என்றும் இந்த தாய் சென்டிமென்ட் நல்ல வியாபாரப் பொருளாக பயன்படுத்தப் படுகிறது.
தாய் தெய்வத்திற்கு நிகரானவள்.
தாய்க்கு பின் தாரம்
தாய் சொல்லைத் தட்டாதே
எல்லாக் குழந்தையும் தாய்க்கு சமமானதுதான்.
தாய்ப்பாசம் உண்மையானது

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
இதில் நாய்ப்பாசம் என்பது மிருகங்கள் மொத்தத்தையும் குறிப்பதாகும்.
எல்லா உயிரினத்துக்கும் தாய்மை உணர்வு பொதுவானது.
இதில்தாய்பாசத்தின் மீது மனிதன் மிகையாக கற்பிதங்களை வைக்கிறான்.

அதை அம்பலப்படுத்த இந்த நாய்ப்பாசமே போதுமானது.
தாய்ப்பாசம் உண்மையானது
என்கிறார்கள். ஆனால் எந்த நாயும்
தனது குட்டியை அரசு தொட்டிலில்
அனாதை இல்லத்தில் போட்டுவிட்டு போவதில்லை.

எந்த நாயும் காசுக்கு குழந்தையை விற்பதில்லை.
எந்த நாயும் 'கள்ள காதலுக்காக' குழந்தையை கொல்வதில்லை.
எந்த நாயும் குழந்தையை விட்டுவிட்டு
கள்ள காதலனோடு ஓடிப் போவதில்லை.

குட்டியிலிருந்து பாலூட்டி சீராட்டி நாயை வளர்த்தாலும் அதன் குட்டிகளை நம்மை தொட அனுமதிப்பதில்லை.
அப்படி பாதுகாக்கும்.

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தாய்ப்பாசத்தைவிட நாய்ப்பாசமே மேல்.
எந்த நாயும் சினைப்பிடித்ததும்
ஆண் நாயை புணர அனுமதிப்பதில் லை.குட்டிகள் பெரிதாகும்வரை அது தொடர்கிறது. இந்த விசயத்திலும் மனிதஇனம் பின்னில்தான்.

எந்த நாயும் குட்டி ஆணா,பெண்ணா என்று ஸ்கேன் செய்து பார்ப்பதில்லை. சிசுக்கொலை செய்வதில்லை, கருச்சிதைவு செய்து கொள்வதில்லை
எந்த நாயும் அழகு குறைந்துவிடுமென
பால் கொடுக்காமலிருப்பதில்லை.
எந்த நாயும் வேலைக்காரியிடம் குழந்தை பாராமரிக்க விட்டுவிட்டு
புல் மேக்கப்பில் அலைவதில்லை.

அதேபோல், தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒரே போலத்தான் என்பதும் மிகையான மதிப்பீடே.
"எனக்கு சின்னவனைத்தான் பிடிக்கும்"
"ஒரு பொம்பளப்பிள்ளை இருந்தா நல்லது" அப்புட்டும் பொட்டையாப் பொறந்திருச்சு ஒரேஒரு ஆம்பளப் பிள்ளையை"வேண்டுவதும்
எதாவது ஒரு குழந்தைக்கு சிறப்பாக செய்வதும் வயசான காலத்தில் வசதியுள்ள பிள்ளையிடம் வாழ்வதும்

அதே நேரத்தில் "எந்த பிள்ளையும் வேண்டாமென "தனித்து வாழ்வதும்
பிடித்த பிள்ளைக்கு அதிகச் சொத்தை கொடுப்பதும் நாம் தினம்தினம் பார்க்கிற காட்சிதான்.

எல்லா உயிர்களுக்குமுள்ள பொதுவான இரண்டம்சம்,தான் உயிர் வாழ்வது,தனது வம்சத்தை உற்பத்தி செய்வது. 
இதைத்தான் மனிதனும் செய்கிறான்.

16,18வயதில் காதலிக்கும் போதோ
திருமணத்தை முடிவு செய்யும் போதோ ஒரு குழந்தையைப் பெற்று "தாயாக" வேண்டுமென யாரும் நினைப்பதில்லை. இனப்பெருக்கமும் அதற்கு உடலுறவும் இயல்பாக நடக்கும் உயிரியல் அடிப்படை.

சரி ,எதற்காக தாய்மையை மனிதன் புகழ்கிறான்.?
இதில் 75%ஆணாதிக்கம்தான் காரணம்
கற்பு,வாரிசை பெற்றுத்தர, பிற்போக்கு மதஜாதி கலாச்சாரத்தை பெண்களின் தலையில் கட்டிவைக்க, வீட்டுக்குள் முடக்க ,மொத்தத்தில் பெண்கள் அடிமைப்பிண்டமாக்கவே இந்த 
அம்மா சென்டிமென்ட் உதவுகிறது.

தாய்ப்பாசம் மட்டுமல்ல, நட்பு,காதல், 
சகோதரப்பாசம், மொழி,இன, தேச பற்று, குடும்பப்பாசம் எல்லாமே 
இன,மொழி,பூகோள,கலாச்சாரம் போன்றவை 30%தையும், பொருளாதாரம்,வர்க்கநலன் 70% தையும் தீர்மானிக்கும்.

இதல்லாமல் தனியாக புனிதமான, உண்மையான அன்பு என்ற ஒன்று கிடையாது.அது காதலானாலும் சரி
தாய்ப்பாசமானாலும் சரி

தாய்ப்பாசம், காதல்,சகோதரப்பாசம்,
என்ற குடும்ப உறவுகள் 
தனது ரத்தத்தில் பிறந்த ரத்த உறவுகள்
மீது மட்டுமே பாசம் வைப்பது பச்சையான சுயநலமில்லையா?

மனிதனின் தாய்ப்பாசம் மட்டுமல்ல
எல்லா மிருகங்களும் தனது குட்டியை போற்றுவதும் பாதுகாப்பதும் இயல்பான உணர்ச்சிதான்.
பச்சையான சுயநலம்தான்.

மனிதனுக்கும் மிருகத்துக்கும் வித்தியாசமென்ன?
சிரிப்பல்ல, சிந்திப்பது. அதன் விளைவுதான் பொதுநலன்.

எந்த விலங்கும் தனது இனத்திற்காக வாழவேண்டும், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்காது.
தனது மனிதஇனம் மொத்தமும் வாழ வேண்டுமென நினைக்கும் பொதுநல உணர்வும் சமூகத்துக்காக தனது வாழ்க்கையையே தனது உயிரையே
கொடுக்கும் தியாகஉணர்வுதான் 
தாய்ப்பாசத்தைவிட பெரிது.

தாய்ப்பாசம் சுயநலமானது
நாட்டுக்குழைக்கும் பொதுத் தொண்டு
பொதுநலமானது.

தனது சொத்தையெல்லாம் மக்களுக்கு எழுதிவைத்துவிட்டு சுய நினைவு இழக்கும்வரை அரை நூற்றாண்டாக மக்களுக்கு உழைத்த தேசத்தந்தை
பெரியாரின் தொண்டு

வசதிவாய்ப்புகளை உதறிவிட்டு
நாடுநாடாக விரட்டப்பட்டு, கண்முன்னே ஒவ்வொரு குழந்தையாக செத்து விழுந்த போதும் 
உலக தொழிலாளிவர்க்க விடுதலைக்காக #மூலதனத்தை எழுதிக் கொண்டிருந்த கம்யூனிச பேராசான்
காரல் மார்க்ஸ்ஸின் தியாகம்

லெனின், மாவோ, சேகுவேரா, ஹோசிமின்,புத்தர்,சாக்ரடீஸ் போன்றோரின் 
தியாகம் நாட்டுக்காக வாழ்ந்த பொதுநல உணர்வுதான்


No comments: